பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

இரங்கல், ஊடல் என்னும் ஐந்து உரிப்பொருளாகப் பிரிக்கப் பட்டும்; அவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நிலங்கட்கு உரிமையாக்கப்பட்டும் உள்ளன. இப் பிரிப்பும் நிலவுரிமைப்படுத்தமும், முதனூலாசிரியரின் நெடுங்காலக் கூர்ங் கவனிப்பையும் நுண்மாண் நுழைபுலத்தையும் தெற்றெனக் காட்டுகின்றன. இதனை என் 'பொருளிலக்கண மாண்பு' என்னும் நூலில் விளக்கிக் காட்டுவேன்.

குறிஞ்சி

ஐந்திணைப்பெயர் மூலம்

குறி = அடையாளம், காலம், அளவு, த வை.

குறி - குறிஞ்சி

=

ஒரு பல்லாண்டுக்கால அளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச் செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்த இடமும், மலைநாடு.

-

ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.

கோடைக்கானல் மலையிலும் நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள், பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலை யிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந் தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டு வந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும் இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.

ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சி வகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும் காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறு அளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர். குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.

முல்லை

முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள் நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.

66

முல் - முள் = 1. கூர்மை. "முள்வாய்ச் சங்கம்" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணை யுறுப்பு. இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879 ).3. ஊசி. 4. பலாக்காய் முனை.

முள் - முளை = கூரிய முனை. “முள்ளுறழ் முளையெயிற்று" (கலித்.4 )