பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




101

முல் - முல்லை = கூரிய அரும்புவகை, அஃதுள்ள கொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்த இடமும். “முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு” (அகம். 4:1).

என்பதில், முல்லையரும்பை வைந்நுனை என்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல் காண்க. வை = கூர்மை.

பாலை

பால்

-

பாலை =

இலையிற் பாலுள்ள செடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணை யினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும் நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லை நிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில் தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும் வன்னிலம்.

பகல் (பகுப்பு) என்னும் சொல்லின் மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும், பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும் தொடர்பில்லை.

மருதம்

மல் = வளம். “மற்றுன்று மாமலரிட்டு” (திருக்கோ.178)

மல்

-

மல்லல் = 1. வளம் .“மல்லல் வளனே." (தொல்.788 ) . 2. அழகு. "மல்லற்றன் னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு (சூடா.).

மல் - மல்லை = வளம். “மல்லைப் பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).

மல்

-

(மர்)-மருது=ஆற்றங்கரையும் பொய்கைக்கரையும்

போன்ற நீர்வளம் மிக்க நிலத்தில் வளரும் மரம்.

ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது = வெற்றிச் சின்னம்.

66

99

பருதி.....விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை.5) மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருத மரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்த இடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.

66

அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத் துறையணி மருது தொகல்கொள வோங்கி

வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரின்"

(அகம். 97)

(புறம்.52)