பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

xi

யியக்குநருங் கூட, தம் நாட்டு வரலாறும் மொழி வரலாறும் அறியாதிருக்கும் நாடு தமிழ்நாடு ஒன்றே அரசியல் திணைக் களத்திலும் பல்கலைக் கழகங்களிலும் தாய் மொழித்துறைத் தலைமைப் பதவி தாங்கி ஆயிரக் கணக்காய்ச் சம்பளம் வாங்கிக் கொண்டு, அகப் பகையோடும் புறப் பகையோடுங் கூடித் தாய் மொழியைக் காட்டிக் கொடுக்கும் (தன்மானமுந் தகுதியுமற்ற) பேராசிரியர் வாழும் நாடும் தமிழ் நாடொன்றே. இதனால், தமிழரை என்றுந் தம்மடிப் படுத்த வேணவாக்கொள்ளும் வந்தேறிப் பகைவரான வரலாற்றாசிரியர். சென்ற நூற்றாண்டிலேயே சுந்தரம் பிள்ளையும் வின்சென்று சிமிதும் இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்க வேண்டுமென்று எச்சரித் திருந்தும், அதைப் புறக்கணித்து இற்றைத் தமிழரின் அடிமைத்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு இயற்கைக்கும் உணமைக்கும் மாறாக, வடக்கினின்று தொடங்கியும் பிற்காலத்ததும் பிறழக் கூறுவதுமான ஆரிய வேதத்தையே அடிப்படையாகக் கொண்டும், தமிழரையும் தம்போன்று அயல் நாட்டினின்று வந்தவ ரென்றும், அதினுங் கேடாக ஆறினக் கலவையினத்தாரென்றும், தமிழருக்குத் தனி யெழுத்தில்லை யென்றும், அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தினின்று கி.மு. 2ஆம் நூற்றாண்டில் திரிக்கப்பட்டதே தமிழெழுத் தென்றும், தாம் விரும்பிய வாறெல்லாம் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

ம்

அறிவியல் நெறிப்படி நடுநிலையாய் ஆய்ந்து உண்மை காணவேண்டிய மேனாட்டாரும், தமிழர் இன்று எல்லாத் துறையிலும் பிராமணர்க்குக் கீழ்ப்பட்டிருப்பதனாலும், குமரிக்கண்டம் முழுகியும் ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழ் நூல்க ளெல்லாம் அழிக்கப்பட்டும் போனமையாலும், இந்திய நாகரிக இலக்கியம் இன்று பெரும்பாலும் சமற்கிருதத்திலேயே இருப்பதனாலும், பிராமணரும் தாமும் ஆரியர் என்னும் ஓரினத்தார் என்னும் உணர்ச்சியினாலும், மாந்தன் தோன்றியது பலத்தீன (Palestine) நாடென்னும் ஏதேன் தோட்டக் கதை யினாலும், (பண்டைத் தமிழிலக்கியம் மறையுண்டும் தமிழர் விழிப்பின்றியும் இருந்த காலத்தில்) கால்டுவெலார் தாமாக ஆய்ந்து தமிழ நாகரிகத்தின் உயர் கூறுகள் ஆரிய வழியின வென்று தவறான முடிபு கொண்டமையாலும், பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் தமிழ்நாட்டில் மிக்கிருப்பதனாலும், ஆரியச் சார்பானவரும் அவருக்கு உடந்தை யாளருமே தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களின் தமிழ்த் துறைத் தலைவராகவும்