பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

CC

பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சி துஞ்சும்

99

ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.

(புறம்.351)

66

மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறை "

(ஐங்.33)

66

கரைசேர் மருத மேவி"

(ஐங்.74)

66

திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை"

(கலித்.27)

66

மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்

99

மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு (பதிற்.23)

வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை

காவிரிப்

99

(சிலப்.14:72)

பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த (குறுந்.258) இம் மேற்கோள்களிலெல்லாம், மருதமரம் ஆற்றையும் பொய் கையையும் வயலையுமே அடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.

நெய்தல்

நள்ளுதல் = 1. அடைதல். “உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக் கோச்செங்.25).2. செறிதல். “நள்ளிருள் யாமத்து" (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல். 4.நட்புச்செய்தல். “நாடாது நட்டலின் கேடில்லை” (குறள்.761) நள்ளார் = பகைவர்.

நள் - நண். நண்ணுதல் =1. கிட்டுதல். “நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது” (திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல். நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர். “நண்ணாரும் உட்குமென் பீடு” (குறள்.1088)

நள் - நளி. நளிதல் = 1. செறிதல். “நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்" (மலைபடு.197). 2. ஒத்தல். "நாட நளிய நடுங்க நந்த (தொல்.1232)

-

நள் - நெள் - நெய். நெய்தல் = 1. தொடுத்தல். “நெய்தவை தூக்க” (பரிபா.19:80). 2. ஆடை பின்னுதல். “நெய்யு நுண்ணூல்” (சீவக.3019). 3.ஒட்டுதல்.

நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கின வெண்ணெய்.”நீர்நாண நெய்வழங்கியும்” (புறம்.166:21).2. வெண்ணெய். “நெய்குடை தயிரி னுரையொடும்" (பரிபா.16:3).3. எண்ணெய். “நெய்யணி மயக்கம்' (தொல். பொருள்.146).4.புனுகுநெய். “மையிருங் கூந்தல் நெய்யணி

99