பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




103

மறப்ப” (சிலப்.4:56). 5. தேன். “நெய்க்கண் ணிறாஅல்” (கலித்.42). 6.அரத்தம். “நெய்யரி மற்றிய நீரெலாம்” (நீர்நிறக்.51).7.கொழுப்பு. "நெய்யுண்டு" (கல்லா.71).8. நேயம், நட்பு. "நெய்பொதி நெஞ்சின் மன்னர்” (சீவக.3049).

நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.). 2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. "நேயத்த தாய் நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39). 4.தெய்வப் பற்று. "நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி" (திருவாச.1:13)

நேயம் நேசம் = 1. அன்பு. "நேசமுடைய வடியவர்கள்” (திருவாச.9:4 ) 2. ஆர்வம். “வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).

நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்பு வைத்தல். “நேசிக்குஞ் சிந்தை’ (தாயு. உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.

"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

99

(தாயு. பரிபூர.13). நெய் - நெய்தல் = நீர் வற்றிய காலத்திலும் குளத்துடன் ஒட்டி யிருக்கும் செடிவகை, அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல் சார்ந்த இடமும்.

66

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்

-

அக்குளத்திற்

(மூதுரை,17)

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு”

என்பதை நோக்குக.

பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள் பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியே ஏற்பட்டன.

எ டு :

ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு, பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.

நாட்டுப்பெயர்- ஏழ்தெங்கநாடு, ஏழ்குறும்பனை நாடு. பெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு, இலவந்தீவு, தெங்கந்தீவு. ஒவ்வொரு பெருந்தீவும் பொழில் (சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால், உலகமும் பொழிலெனப்பட்டது.

"ஏழுடையான் பொழில்"

(திருக்கோ.7)