பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணை நிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரிய கருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றிய நிலைமை யையும், உரிப்பொருள் என்னும் புணர்தல் இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும், இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே,

66

66

66

பாலை நின்ற பாலை நெடுவழி

99

முல்லை சான்ற முல்லையம் புறவின்

99

மருதஞ் சான்ற மருதத் தண்பணை

99

(AMILIIT GODT.11)

(சிறுபாண்.169)

(சிறுபாண்.186)

என்னும் அடிகளில், முன்னிற்கும் திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர் களாய் அமைவதும் இம் முறையிலேயே.

மேற்காட்டிய சிறுபாணாற்றுப்படை யடிகட்கு, “பாலைத் தன்மை நிலைபெற்றமையாற் பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி”; “பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல் மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவதொரு காலம்” என்றும்;

66

கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்த தன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்த அழகினை யுடைய காட்டிடத்து” என்றும்;

66

'ஊடியுங் கூடியும் போகநுகருந் தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்த வயலிடத்து” என்றும்;

நச்சினார்க்கினியர் உரை கூறியிருத்தலைக் காண்க.

இங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும், ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரிய உரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன.

மருதஞ் சான்ற = ஊடலாகிய உரிப்பொருளமைந்த.

முல்லை சான்ற

குறிஞ்சி சான்ற

=

=

இருத்தலாகிய உரிப்பொருளமைந்த. புணர்ச்சியாகிய உரிப்பொருளமைந்த.

பாலை சான்ற = பிரிவாகிய உரிப்பொருளமைந்த,

நெய்தல் சான்ற

=

இரங்கலாகிய உரிப்பொருளமைந்த.

குறிஞ்சி முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லை என்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பது தொழிலாகு