பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




105

பெயரும் ஆகும். ஐந்தும் முன்பு நிலத்தைக் குறித்துப் பின்பு நிலவொழுக் கத்தைக் குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகு பெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும்.

இடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக் குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங் கொச்சை வழக்குப் போன்றது. நிலவொழுக்கத்தின் பெயரே நிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகை என்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப் பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வ தொத்ததே.

காதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வ ஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத் தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள் வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படை யொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங் காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம் ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர் (கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம் கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு, இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக் காமப் புணர்ச்சியு மன்று.

கற்பில் தொடங்கும் மணவாழ்க்கையே பெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச் சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோ ரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும் இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்

காதலர் வாழ்க்கை தொடக்கம்முதல் முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவை என்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும் காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்கு நுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப் பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச் செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்கு வழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர் நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தே இறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.

ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே

என்னும் மதிப்புரைத் தனிப்பாடலை நோக்குக.