பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

திருவள்ளுவரும், நடவாமுறை அறத்தைக் கூறாது நடைமுறை

யறத்தையே கூறுவதால், கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புல வின்பமும் ஒருங்கே தரும் ஒண்டொடி, அருள் அருள் நிறைந்த இறைவனால் ஆடவனுக்கு அளிக்கப்பெற்ற வாழ்க்கைத்துணை யென்று கண்டு, அவளோடு கூடி அறவழியில் இன்பம் நுகர்ந்து, ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செய்யின், இம்மைச் இம்மைச் சிற்றின்பமும் சிற்றின்பமும் மறுமைப் பேரின்பமும் அடையலாம் என்பதை யுணர்த்தற்கே, இன்பத்துப் பாலை இறுதியிற் கூறினார். இதை யுணராது, துறவறத்தினாலேயே வீடுபேறுண்டாம் என்னும் ஆரியக் கொள்கையை நம்பும் சிற்றறிவாளர், இன்பத்துப்பாலைப் பழிக்கவும் திருவள்ளுவரைக் கண்டிக்கவும் துணிவர்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்

என்னுங் குறளை நோக்குக.

99

(குறள் 46)

இனி, அகப்பொருள் போன்றே புறப்பொருளும் அரசனையே தலைமையாகக் கொண்டு, அவன் மறவாழ்க்கைக்குரிய போர்த் தொழிலை எழுதிணையாக வகுத்துக் கூறுகின்றது. அவற்றுள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்னும் நான்கும் போர் வகைகளையும், வாகை போர் வெற்றியையும், காஞ்சி போரால் விளங்கித் தோன்றும் உலகநிலையாமையையும், பாடாண் போர் வெற்றியால் ஏற்படும் புகழையும் பற்றியனவாம்.

தமிழ்ப் பொருளிலக்கணம் காதலையும் போரையுமேபற்றிக் கூறுவதால், மற்றப் பொருள்களெல்லாம் விடப்பட்டுள்ளன வென்றும், அரசனும் படைமறவருமே போர்புரிவதால் பிறர் தொழில்களை யெல்லாம் அது தழுவவில்லை யென்றும், சிலர் கருதிக் குறைகூறாவாறு, வாழ்க்கைப் போராட்டத்தில் மக்கள் மேற்கொள்ளும் எல்லாத் தொழில் வெற்றிகளும் திணையுள் அடக்கப்படுகின்றன. அது,

66

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும் பாலறி மரபின் பொருநர் கண்ணும்

அனைநிலை வகையோ டாங்கெழு வகையின் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்'

என்று தொல்காப்பியமும்,

வாகைத்

99

(1021)