பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




109

பண் (7 இசை), பண்ணியல் (6 இசை), திறம் (5 இசை), திறத்திறம் (4 இசை) எனப் பண்களை நால்வகையாக வகுத்திருந்தனர்.

(9

நரப்புக்கருவிகள் முந்தியாழ் (ஆதியாழ், பெருங்கலம், ஆயிர நரம்பு), வில்யாழ் (பல நரம்பு), பேரியாழ் (21 நரம்பு),சுறவியாழ் (மகரயாழ்19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), முண்டகயாழ் நரம்பு), செங்கோட்டியாழ் (7 நரம்பு), சீறியாழ் (4 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) எனப் பலவகைய. ஆயிரம் என்றது பெருந்தொகையை. உறை யென்றது உறையினாலேயே செய்யப்பட்ட தாளக் கருவியை.

நரப்புக்கருவி இசைவளர்ச்சியின் உச்சநிலையைக் காட்டும். யாழ்த்தண்டின் கடையில் யாளித்தலை யுருவம் பொருத்தப்பட்ட தனால், நரப்புக்கருவி யாழ் எனப் பெயர் பெற்றது. மடங்கல்(சிங்க) உடம்பும் யானைத்துதிக்கை போன்ற நீண்ட மூக்குங் கொண்ட யாளி என்னும் விலங்கினம், குமரிநாட்டிற்கே யுரியதாகும்.

யாழிசையின்பத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட அசுணம் என்னும் விலங்கும் குமரிநாட்டிற் குரியதே. அது பறவையோ என்று சிலர் ஐயுறுகின்றனர். ஆயின், அதை அசுணமா என்று சிந்தாமணி கிளந்தே கூறுகின்றது.

66

66

இன்னளிக் குரல்கேட்ட வசுணமா” (சீவக.1602). நற்றிணை 'அசுணங் கொள்பவர் கைபோல்" (304) என்று இனச்சிறப்புப் பெயரையே குறித்திருப்பினும், “இசையறி விலங்காகிய அசுண மானை என்று, ஒரு மான்வகையாகவே நாராயணசாமி ஐயர் உரை வரைந்திருக்கின்றார். மானிறைச்சி எல்லாராலும் விரும்பப் படுவதாலும், மான்வேகமாய் ஓடும் விலங்கினமாதலாலும், அசுணம் ஒரு சிறந்த மான்வகையாகவே இருந்திருக்கலாம்.

யாளிக்கும், வலிமையும் தோற்றப் பொலிவும் மட்டுமன்றி, இசையுணர்ச்சியும் இருந்திருக்கலாம்.

ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப் பாலை என்னும் பண்திரிப்பு முறைகள், முறையே, முழுவிசையும் அரையிசையும் காலிசையும் அரைக்காலிசையும் பற்றியவாயின், தமிழிசைக்கு உலகில் இன்றும் இணையில்லை யென்றே

சொல்லலாம்.

நாடகம்

இயற்றமிழ்க்குரிய புலனெறி வழக்கத்தில் நாடக வழக்கமும் கலந்திருப்பதனாலும், தலைக்கழகத்து இலக்கணம் மாபிண்ட மென்னும் முத்தமிழிலக்கணமாகவே வழங்கியதாலும், நாடகமும் அக்காலத்து வளர்ச்சியடைந்திருந்தமை அறியப்படும்.