பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

இசை நாடக விரிவை யெல்லாம், இனி நான் எழுதும் 'முத்தமிழ்’ என்னும் நூலிற் கண்டுகொள்க.

கணக்கு

குமரிநாட்டு மக்கள் பழங் கற்காலத்திற் பத்து வரையும், புதுக்கற் காலத்தில் நூறு வரையும், பொற்காலத்தில் ஆயிரம் வரையும், செம்புக்காலத்திற் பத்தாயிரம் வரையும், உறைக்காலத்தில் நூறாயிரம் வரையும், இரும்புக்காலத் தொடக்கத்திற் பத்து நூறாயிரம் என்னும் கோடி வரையும் எண்ணத் தெரிந்திருத்தல் வேண்டும். அதன்பின், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம், பரதம் முதலிய அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்கள் எழுந்தன. பரதம் என்பது, 1-ன்பின் 24 சுன்னங் காண்டது.

தொடக்கத்தில் இருகை விரல்களையும் எண்ணிப் பத்தென்னும் எண்ணைப் பெருந்தொகையாகக் கொண்டதனாலேயே, மேற்பட்ட பிற்காலத்துப் பெருந்தொகைகளை யெல்லாம் முறையே பப்பத்து மடங்கு உயர்ந்தனவாகக் கொண்டிருக்கின்றனர்.

ரு

மேல் வாயிலக்கம் போன்றே கீழ்வாயிலக்கமும் (fractions) நெட்டளவு கண்டனர். முந்திரி 1/320, கீழ் முந்திரி 1/320-ல் 1/320 இரு வாயிலக்கங்கட்கும் சதுர வாய்பாடுகளும் (Square tables) இருந்தன. கீழ்வாய்க்குச் சிறுகுழி; மேல்வாய்க்குப் பெருங்குழி.

ங்

கோலாரிய மாந்தர் கைவிரல்களோடு கால்விரல்களையுஞ் சேர்த்து எண்ணியதனால், பேரெண்களையெல்லாம் பப்பத்து மடங் காகக் கொள்ளாது இவ்விருபது மடங்காகக் கொண்டிருக்கின்றனர். ஆயின், மேலைநாடுட்பட நாகரிக நாடுகளெல்லாம் தமிழ் முறையையே பின்பற்றி வருவது கவனிக்கத்தக்கது. கணியம்

குமரிநாட்டுக் கணிதநூல் வல்லார் கூர்ங்கண்ணராயிருந் தமையின், 27 நாள்களையும் கதிரவனுந் திங்களுமல்லாத ஐங்கோள் களையும் பன்னீ ரோரைகளையும் கண்டுபிடித்தனர்.

பகலிரவால் நாளையும், வளர்பிறை தேய்பிறையால் மாதத் தையும், இருதிசை இயனத்தால் (அயனத்தால்) ஆண்டையும் அறிந்தனர்.

எழுகோள்களால் கிழமை (வாரம்) என்னும் எழுநாட் கால அளவும், பன்னீ ரோரைகளாற் பன்னிரு மாதப்பெயரும் ஏற்பட்டன.

-

மாதம் என்பது தென்சொல்லே. மதி திங்கள், மதி மாதம் - வ. மாஸ. திங்களைக் குறிக்கும் மதி என்னுஞ் சொல் வடமொழியில் ல்லை. ஒ.நோ: moon-month.