பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




111

எழுநாட் கிழமை உலகமெங்கும் தொன்றுதொட்டு வழங்கி வருவது, தமிழ் நாகரிகப் பரவலின் விளைவாகும். விவிலியத்தின் முதற் பொத்தக முதலதிகாரத்திற் கூறப்பட்டுள்ள படைப்பு வரலாற்றில், இறைவனார் அறுநாள் படைத்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்றது, தமிழர் வகுத்த கிழமை முறையைத் தழுவியே.

ஆரிய மொழிகளில் வழங்கிவரும் பன்னீ ரோரைப் பெயர்களும், தமிழ்ப்பெயர்களின் மொழிபெயர்ப்பே.

இளவேனில், முதுவேனில், கார், கூதர், முன்பனி, பின்பனி என்னும் பெரும்பொழுது (ஆண்டின் பகுதிகள்) ஆறற்கும் எதிராக காலை, நண்பகல், எற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை என்னும் சிறுபொழுது (நாளின் பகுதிகள்) ஆறும், இயற்கையாக அமைந்தன.

மதம்

தலைக்கழகக் காலத்தில், சிவ மதத்திற்கும் திருமால் மதத்திற்கும் பொதுவானதும், ஊர் பேர் குணங்குறியற்று எங்கும் நிறைந்திருக்கும் ஒரு பரம்பொருளை எங்கும் என்றும் உள்ளத்தில் தொழுவதும் ஆன கடவுள் நெறி (சித்த மதம்) என்னும் உயர்நிலை மதம், தமிழத் துறவியரால் தோற்றுவிக்கப்பட்டது.

இதன் விளத்தமும் (விவரமும்), சமயம் மதம் என்னும் இருசொல்லும் தென்சொல்லே யென்பதும், அடுத்து வெளிவரும் தமிழர் மதம்' என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.

வடக்கே சென்று திரவிடராகத் திரிந்த குமரிநில மக்களுள் ருசாரார், வடமேற்குத் திசையிற் பரவி ஐரோப்பாவிற்குள் புகுந்து ஆரியராக மாறத் தொடங்கியிருத்தல் வேண்டும்.

முதற் கடல்கோள்

அக்காலத்திற் புயலாலும் பாறையாலும் கலச்சேதம் அடிக்கடி நிகழ்ந்ததால், பெருங்கடலைக் கடப்பதும் கடந்தால் மீள்வதும் அரிதாக விருந்தன. நெடியோன் என்னும் பாண்டியன் ஒருவன், கடல் கடந்து கீழ்த்திசை நாடுகட்குச் சென்று, ஏமமாக மீண்டான். கடல் தனக்கு உதவியாக இருந்ததென்று கருதி, தன் நன்றியறிவைக் காட்டும் முகமாகக் கடல் தெய்வத்திற்கு ஒரு விழாக் கொண்டாடினான். அவனையே “முந்நீர் விழவின் நெடியோன் (புறம்.9) என்று நெட்டிமையார் குறித்தார்.

ன்னொரு பாண்டியன், கலப்படையமைத்துக் கீழ்த்திசைத் தீவொன்றிற்குச் சென்று, தான் கடலைக் கடந்துவிட்டமையால்