பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

தமிழர் வரலாறு

துணை கண்காணகராகவும் அமர்த்தப்படுவதனாலும் வையாபுரி களும் வணிகப் புலவரும் மறைமலை யடிகளையும் அவர் வழியினரையும் இருட்டடிப்புச் செய்து வருவதனாலும், இற்றைத் தமிழருள் நூற்றிற் கெழுபதின்பர் தற்குறிகளா யிருப்பதானலும், கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் இன்னும் பெரும்பாலும் சமற்கிருதத்தில் பிராமணராலேயே நடத்தப்பட்டு வருவதனாலும், தமிழரின் பழம் பெருமையை அறியும் நிலைமையில் இல்லை.

1929ஆம் ஆண்டில் (P.T.) சீநிவாச ஐயங்கார் தெற்கினின்று தொடங்கித் தமிழர் வரலாறு (முளைவடிசல டிக வாந கூயஅடைள) வரைந்து வெளியிட்டாரேனும், அது ஆங்கிலத்தி லிருப்பதனாலும் போதிய அளவு மொழி நூற் சான்று காட்டாமை யாலும், இவ் வரலாற்று நூலை வரையத் துணிந்தேன்.

இது என் மதுரை மணிவிழாக் குழுவார்1967-ல் தொகுத் தளித்த நன்கொடைப் பயனாக வெளிவருகின்றது. அக் குழுவார்க்குத் தமிழுலகம் என்றும் ஆழ்ந்த கடப்பாடுடையது.

கோவைத் திரு. இராமசாமிக் கவுண்டர் அவர்களும் (8/39, 22ஆம் தெரு, தாதாபாத்து) அவர்கள் மகனார் திரு. நித்தலின்பனாலும், இந்நூல் தொடர்பாகச் செய்த பல்வகை யுதவிகள் ஒதுபோதும் மறக்கற் பாலன வல்ல.

மன்றத்தாரே,

தம் பெயர்கொண்டு விளங்கும் இனித்தமிழும் தமிழ் நாகரிகமும் பற்றிய தனித்தமிழ் நூல்களை அச்சிட வேண்டுமென்று, மறைமலை யடிகளே ஆவி வடிவில் வந்து அமைத்து வைத்தாற் போன்ற மறைமலை அச்சகத்தில், புத்தம்புது முத்தெழுத்துக்களைக் கொண்டு குறுகிய காலத்திற் செவ்வையாக இந்நூலை அச்சிட்டுத் தந்த, அவ்வச்சக உரிமையாளரான புன்செய்ப் புளியம்பட்டி மறைமலை யடிகள் மன்றத்தார்க்கு, தனித்தமிழன்ப ரெல்லாம் நன்றியும் வாழ்த்துங் கூறத் தனிக் கடமைப்பட்டுள்ளனர்.

காட்டுப்பாடி விரிவு,

29-1-1940

ஞா. தேவநேயன்