பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

அதை வென்று தனக்கு அடிப்படுத்தியதாகக் கருதி, அதற்கு அடை யாளமாக, கடற்கரையிலுள்ள பாறை யொன்றில் தன் அடிச் சுவடுகளைப் பொறித்து, அவற்றைக் கடல் தன் அலையால் என்றும் அலசிக் கழுவுமாறு செய்தான். அதனால், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான்.

கடலுக்கு அஞ்சின நெடியோன் வேறு; அதற்கு மிஞ்சின வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வேறு.

இன்னுமொரு பாண்டியன் கடன்மேற் செல்லும்போது, கடல் கொந்தளித்தது. அதைக் கடல் தலைவனின் வினையாகக் கருதி, அதையடக்க ஒரு வேலை விட்டெறிந்தான். கொந்தளிப்பு இயற்கை யாக அடங்கிற்று. ஆயின், அது வேலெறிந்ததன் விளைவென்றே அப் பாண்டியனும் அவன் உழையரும் கருதினர். பொதுமக்கள் அதனால் என்ன நேருமோ நேருமோ என்று அஞ்சியிருத்தல் வேண்டும். சிறிது காலத்தின்பின், அவ் வச்சத்திற் கேற்பவே, பாண்டிநாட்டின் பெரும் பகுதியைக் கடல் கொண்டது. அது கி.மு.5000 போல் நிகழ்ந்ததாகும். அதனையே,

66

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.

99

(சிலப்.11:17-20)

“முன்னொரு காலத்துத் தனது பெருமையின தளவை அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி, வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல் பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ண தாகிய பஃறுளி யாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டையும் கொண்டதனால், வடதிசைக்கண்ணதாகிய கங்கை யாற்றினையும் . மலையினையும் கைக்கொண்டு ஆண்டு, மீண்டும் தென்றிசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக.'

இமய

66 கடல் எறிந்து கொண்ட எல்லையளவும் வடபால் தனதாக்கி, மீண்டும் தென்றிசையை யாண்டவென ஒப்பாக்கலு மொன்று. அடியாலுணர்த்தி எறிந்த பகைபொறாது கொள்ளத் தானுங் கொண்டு ஆண்ட தென்னவ னென்க'

என்று அடியார்க்கு நல்லார் இப் பகுதிக்கு வரைந்துள்ள உரையை நோக்குக.