பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




113

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தியது வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தி. ஈரரசரும் ஒரு குடியினர் என்னுங் கருத்தால், இருவர் செயலும் ஒருவர் செயலாகக் கொள்ளப்பட்டன.

தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதற் கடல்கோள் இதுவே. ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும் குமரிநாட்டினின்று அறவே பிரிந்து நெடுந்தொலைவு நீங்கிவிட்டன. ஆப்பிரிக்கா பிரிந்ததனால் அரபிக் கடல் தோன்றிற்று. அது வங்கக் கடலினும் முந்தித் தோன்றியதனாலேயே, வாரணன் மேற்றிசைத் தலைவனாகக் காள்ளப்பட்டான்.

பழம்பாண்டி நாட்டின் தென்பெரும் பகுதி மூழ்கவே, தலைக் கழகமும் ஒழிந்தது.

கடல்கோள் நிகழ்ந்தவுடன், ஒரு பெருங்கூட்டத்தார் வடதிசை நோக்கிச் சென்றிருத்தல் வேண்டும் . சிறுசிறு கூட்டத்தாரும் தனிப் பட்டவரும் வடமேற்கும் வடகிழக்கும் பல்வேறு நாடுகட்குச் சென்று, கடல்கோட் செய்தியைப் பரப்பியிருக்கின்றனர். பிற்காலத்தில், அந் நாடுகள் ஒவ்வொன்றிலும் கடல்கோள் அல்லது பெரு மழை வெள்ளம் நிகழ்ந்ததாகக் கதை எழுந்திருக்கின்றது.

அலோரசு (Alorus) என்னும் பாபிலோனிய அரசன் காலத்தில், பிலித்தியரின் (Philistines) தாகோன் (Dagon) தெய்வத்தைப்போல் அரை மாந்தனும் அரைமீனுமான (அதாவது, அரைக்கு (இடுப்பிற்கு) மேல் மாந்தன் வடிவமும் அதற்குக்கீழ் மீன் வடிவமுங் கொண்ட), ஓயன்னெசு (Oannes) என்னும் ஓர் உயிரி பாரசீகக் குடாக்கடல் (Persian Gulf) வழியாக வந்து, பாபிலோனியருக்குக் கல்வி முழுவதையும் நாகரிகக் கலைகள் யாவற்றையும் கற்பித்ததாகப் பாபிலோனிய வரலாறு கூறுகின்றது.

க்

அவ் வோயன்னெசு, மேற்கூறிய முதற் கடல்கோட்குப் பின், பாண்டிநாட்டினின்று சென்ற ஒரு தமிழறிஞனாகவே யிருத்தல் வேண்டும். அவனுக்கு அரைமீன் வடிவங் கட்டிக் கூறியதற்கு அவன் கடல் வழியாகச் சென்றதும், பாண்டியனுக்கு மீனக்கொடியும் மீன முத்திரையும்பற்றி மீனவன் என்னும் பெயரிருந்தமையுமே கரணிய

மாகும்.

தமிழக் கலவணிகர் மேல்கடற்கரை யோரமாகவே கராச்சி வழியாகச் சென்று, பாரசீகக் குடாக்கடலுள்ளும் செங்கடலுள்ளும் புகுந்து, மேலையாசியாவொடும் எகிபது நாட்டொடும் வணிகஞ் செய்து வந்ததாகத் தெரிகின்றது. இராமச்சந்திர தீட்சிதரின் 'தமிழர் தோற்றமும் பரவலும்' என்னும் ஆங்கில நூலைப் பார்க்க.