பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

டைக்கழகம்

பாண்டியநாட்டின் பெரும்பகுதி மட்டுமன்றி, பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் மூழ்கவே, பாண்டியர் குடியில் எஞ்சியிருந்தவன் தன் பேரிழப்பை யெண்ணி வருந்தி அதற்கு ஒருவாறு ஈடுசெய்துகொள்வதுபோல், வடக்கிற் சென்று பனிமலைக் குவட்டிலும் கங்கையாற்றங் கரையிலும் தன் கயல் முத்திரையைப் பொறித்து மீண்டான். அன்று அங்கு வல்லரசின்மையாலும் பெரும்பகுதி காட ாயிருந்தமையாலும், சிறிதும் எதிர்ப்பில்லாது போயிற்று. அரசியல் அக்காலத்தில் விரிவடையா திருந்ததனாலும், வடநாவலப் பகுதி மிகத் தொலைவிலுள்ளமை யாலும் மொழிபெயர் தேய மாகையாலும், அவன் அங்குத் தன் குடியினன் ஒருவனைத் துணையரையனாக இருத்திவிட்டுத் தென்னாட்டிற்கே மீண்டு அதை ஆண்டு வந்தான்.

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"

என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க.

அவனுக்கு

(சிலப்.11:19-22)

கட ல்கோட்குத் தப்பிய குடிகளைக் குடியமர்த்துவதிலும், தலைநக ரமைப்பதிலும், ஆட்சித்துணைவரைத் தேர்ந்தெடுப் பதிலும், படை தொகுப்பதிலும் நீண்ட காலஞ் சென்றதனால், பாண்டியனால் நேரடியாகத் தமிழ்நிலம் முழுவதுங் கவனிக்க முடியவில்லை. நாவலந்தேயப் பகுதிகளையாண்ட இரு துணை யரையரும், அந் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு இரு வேந்தராகப் பிரிந்துபோயினர். கீழ்நாடு நெல்விளைவாற் சோழ நாடென்றும், மேல்நாடு மலைச்சரிவாற் சாரல் நாடென்றும் பெயர் பெற்றிருந்ததனால் கீழைவேந்தன் சோழன் என்றும், மேலைவேந்தன் சேரன் என்றும், ஆள்குடிப் பெயர் பெற்றனர்.

=

-

சொல் = நெல். சொல் - சொன்றி = சோறு. சொல் = (சொறு) - சோறு. சொல் - (சோல்) - (சோள்) - சோழ் சோழம்சோழன். ஒ.நோ: கல்(கருமை) - கள் - காள் - காழ் கருமை. காழ் - காழகம் = கருமை.

-

கில்(தோண்டு) - கீள் - கெள் - கேள்- கேழல்

தோண்டும் ஆண்பன்றி.

துல்(பொருந்து) - தொள் - தோள் - தோழன்.

= மண்ணைத்

புல்(துளை) - பொல் - பொள் - போழ் = பிளவு, துண்டு, வார்.