பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




115

சோழநாடு நெல்வளமும்

அதனாற் சோற்றுவளமும்

மிக்கிருந்தது. முதன்முதல் இயற்கையாகவும் நெல் அங்கு மிகுதியாக விளைந் திருத்தல் வேண்டும்.

66

வேழ முடைத்து மலைநாடு மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து

99

என்று ஔவையார் ஒருவர் பாடியிருத்தல் காண்க.

நெற்பயிர் எங்கும் மிகுதியாக விளைக்கப்படும் இக்காலத்திலும், சோழநாட்டின் கருவகமாகிய தஞ்சை மாவட்டமே தமிழகத்தின் நெற்களஞ்சியமா யிருத்தல் காண்க. இன்று இதற்குக் காவிரியாற்று வளமே அடிப்படைக் கரணியமாகும்.

சோழனுக்குக் கிள்ளி, சென்னி, வளவன் என்றும் குடிப்

பெயருண்டு.

குடமலை யென்னும் மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ்ப் புறமாயினும் மேற்புறமாயினும், சேரநாட்டின் பெரும்பகுதி அம் மலையின் அடிவாரச் சரிவே. மலையடிவாரம் சாரல் எனப்படும்.

66

சாரல் நாட நடுநாள்"

66

சாரல் நாட செவ்வியை யாகுமதி”

சாரல் நாட வாரலோ எனவே

99

(குறுந்.19:5)

(குறுந்.18:2)

(குறுந்.141:8)

என்பன மலைப்பக்க நாட்டைச் சாரல் நாடு எனக் கூறுதல் காண்க. சாரல் - சேரல் - சேரலன். சேரல் - சேரன். சேரமகன் - சேரமான். சேரல்,சேரலன்,சேரன், சேரமான் என நால்வடிவிலும் சேரன் குடிப்பெயர் வழங்கும்.

66

66

66

குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு" (சிலப்.பதி.1)

சேரலர்,சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க” (அகம்.149:7-8)

குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு

99

(சிலப்.23:62)

பான்மை நண்பாற் சேரமான் தோழரென்று பார்பரவும்

99

(பெரியபு.கழறிற்.66) சேரனுக்கு உதியன், குடநாடன், கோதை, பொறையன், மலையன், வானவன், வானவரம்பன், வில்லவன் என்னும் குடிப் பெயர்களு முண்டு.