பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

பாண்டியனுக்குப் போன்றே சேரசோழர்க்கும் நாற்படையும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் அமைந்தன.

மூவேந்தர்க்கும், அரசச் சின்னம் பத்தென்றும் அரசியலுறுப்பு ஏழென்றும் கொள்ளப்பட்டன.

முகுடம் (முடி), செங்கோல், மாலை, முத்திரை, குடை, கொடி, முரசு, தேர், யானை, குதிரை என்பன பத்துவகைச் சின்னம். கொடியும் முத்திரையும் குறிவடிவில் ஒன்றேனும், பொருள் வடிவிலும் பயன்பாட்டு வகையிலும் வேறாம்.

நாடு, குடி, பொருள், படை, அரண், அமைச்சு, நட்பு என்னும் ஏழும் அரசியலுறுப்பாம். நாடில்லாமற் குடியில்லையாதலின், நாட்டைக் குடியுள் அடக்கி,

66

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையான் அரசருள் ஏறு

·

(குறள்.381)

என்றார் திருவள்ளுவர் . ஆயினும், நாடும் ஓர் உறுப்பாம் என்பதை அறிவித்தற்கே, அதை 74ஆம் அதிகாரத் தலைப் பாக்கினார். நாடில் லாமற் குடியில்லை; ஆயின், குடியில்லாமல் நாடுண்டு.

அரசனின் சின்னம் (அடையாளம்) வேறு; அரசனின் அரசிய லுறுப்பு வேறு. அரசியலுறுப்பு ஏழும் சேர்ந்து ஓர் உடம்பும், அரசன் அதன் உயிரும் ஆகும்.

ஊர்,

66

மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்

99

(புறம்.186)

உறுப்புஞ் சின்னமும் ஒன்றென மயக்கி, பெயர்(நாமம்), நாடு, ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்று திருவாசகமும்,

66

ஆறு மலையும் யானையுங் குதிரையும் நாடு மூரும் கொடியு முரசும்

தாருந் தேருந் தசாங்க மெனப்படும்

என்று திவாகர வுரிச்சொற் றொகுதியும்,

99

மலை, யாறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, கொடி, முரசு, தானை என்று சூடாமணி யுரிச்சொற் றொகுதியும்,

யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தேர், முரசு, தார்,

கொடி என்று வெண்பாப் பாட்டியலும்,