பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




117

66

மலையே யாறே நாடே யூரே பறையே பரியே களிறே தாரே

பெயரே கொடியே என்றிவை தசாங்கம்’

என்று பன்னிருபாட்டியலும்,

என்று

66

மலைநதி நாடூர் வனைதார் இவுளி கொலைமத களிறு கொடிமுர சாணை இவையே தசாங்கம் என்மனார் புலவர்

இலக்கண விளக்கமும்

பொருந்தாமையை எண்ணிக் காண்க.

66

66

99

கூறும்.

இவற்றின்

முடிகோல் மாலை முத்திரை குடைகொடி முரசுதேர் யானை குதிரை சின்னம்.

99

படைகுடி கூழமைச்சு நட்பரண் நாடோ டுடையான் அரசருள் ஏறு.

99

இவை உரைச் செய்யுள் எனக் கொள்க. முகுடம் என்பது தென்சொல்லே.

முகு - முகிள். முகிள்தல் = அரும்புதல். முகிள் - முகிழ் = அரும்பு. முகிழ் - முகிழம் பேரரும்பு. முகிழ் - முகிழி. முகிழித்தல்= அரும்புதல். முகிள்-முகுள் - முகுளம் பேரரும்பு, மொட்டு. முகுள் - முகுளி. முகுளித்தல் = 1.அரும்புதல். 2. குவிதல். ‘முகுளிக்கும்.... அரவிந்த நூறாயிரம்” (தண்டி.62).

66

-

முகுளம் முகுடம் = குவிந்த அரசர் மணிமுடி. "முகுடமும் பெருஞ்சேனையும்" (பாரத.குரு.14).

-

முகுடம் வ. முகுட்ட

முகுடம் மகுடம் = மணிமுடி. “அரக்கன்றன் மகுடம்” (கம்பரா. முதற்போ.246).

மகுடம் - வ. மகுட்ட.

பரோ தம் ‘சமற்கிருத மொழி'யில் (Sanskrit Language) 'முகுடம்’ தென்சொல்லே யென்று காட்டியிருப்பதைக் காண்க (ப.385).

நாட்டுத்தட் டல்லாத சிறந்த குலக்குதிரைகள் புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், கனவட்டம், கோரம் முதலிய பலவகைகளாக வகுக்கப்பட்டிருந்தன. அவற்றுள், பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை கோரம்; சேரன் குதிரை பாடலம்; சிற்றரசர் குதிரை கந்துகம்.