பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

கதவபுரம் கட்டியமைக்கப்பட்டுப் பல்லாண்டு சென்றபின் இரண்டாம் கழகம் அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர் ஐம்பத் தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடினார் மூவாயிரத் தெழுநூற்றுவர் என்றும், அக் கழகத்தை நடத்தி வந்த பாண்டியர் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக ஐம்பத் தொன்பதின்பர் என்றும், அவருட் பாவரங்கேறினார் ஐவர் என்றும், கழகம் இருந்த கால நீட்சி மூவாயிரத்தெழுநூற் றாண்டு என்றும் றையனா ரகப்பொருளுரை கூறுகின்றது. தலைக்கழக வரலாற்றிற் போன்றே, இதன் வரலாற்றிலும் பல செய்திகள் தள்ளத்தக்கன. கழக மிருந்தது மட்டும் உண்மையான செய்தியாகும். இடைக்கழக நூல்நிலையத்தில் இருந்த நூல்கள் எண்ணாயிரத்தெச்சம் என்று, ஒரு செவிமரபுச் செய்தி வழங்கி வருகின்றது. செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் மாபெரும் பகுதியைக் கடல் கொண்டுவிட்டதனால், தலைக்கழகத்தில் 549 ஆக இருந்த புலவர் தொகை 59ஆகக் குன்றிற்று.

மூவேந்தரும் ஒரே குடியினரும் ஒரே மொழியினருமாதலால், தம்முட் பெண்கொண்டுங் கொடுத்தும் இயன்றவரை ஒற்றுமையைப் பேணி வந்தனர். ஆயினும், ஒரோவொரு சமையத்து, பழவிறல் தாயத்தோ டமையாது புதுவிறல் தாயத்தை நச்சிய பேராசைப் பெருவலி வேந்தன், ஏனை வேந்த னொருவனொடு பொருது அவன் நாட்டைக் கைப்பற்றுவதற்குத் தோற்றுவாயாக, தன் நாட்டுப் பாலைநில மறவரை யேவி அவன் நாட்டு முல்லைநிலத்து ஆநிரைகளைக் கவர்ந்துவரச் செய்து, அவனைப் போருக்குத் தூண்டுவதும் நேர்ந்தது. இதை,

CC

CC

வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே”

66

(தொல்.1002

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும்.

(தொல்.1003)

(தொல்.1007)

(தொல்.1008)

வஞ்சி தானே முல்லையது புறனே.

99

எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே.

என்பவற்றால் அறியலாம்.

ஒரு வேந்தன் இன்னொரு வேந்தனுக்குப் பெண் கொடுக்க மறுத்தபோதும், ஒரு வேந்தன் கொடுங்கோலாட்சி செய்யின் ஒரு செங்கோல் வேந்தன் அவனைத் திருத்தும்போதும் போர் நிகழும். ஆயின், அன்று நிரை கவர்தலும் நிரை மீட்டலு மின்றி நேரடியாகப் போர் தொடுக்கப்படும்.