பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




121

பாலைநிலத்

L

தலைவர், வேந்தரால் ஏவப்படும்போது மட்டுமன்றி, வலிமையற்ற வேந்தர் ஆளும்போதும், அடுத்துள்ள முல்லைநிலத்து ஆநிரைகளைக் கவர்வது வழக்கம்.

இ இங்ஙனம் ஒருபுறம் பாலை மறவரால் நிரை கவரப்பட்டும், மற்றொருபுறம் கோநாய் புலி முதலிய காட்டுவிலங்குகளால் மந்தை யாடுமாடுகள் அடிக்கப்பட்டும், இடர்ப்பட்டு வந்த இடையர், தற்காப்பு வினையிலும் தடுப்பு வினையிலும் தொடர்ந்து ஈடுபட்ட தனால், நாளடைவில் குறிஞ்சிநிலக் குறவர்க்கும் பாலைநில மறவர்க்கும் எள்ளளவும் இளைக்காத காளையரும் ஆளியரும் ஆயினர். ஆயினும், பாலைநிலத்தார்போல் வலியப் போர்க்குச் சென்றதில்லை. ஆயின், வந்த போரை விட்டதில்லை. ஆயர் போல ஆய்ச்சியரும் மறமிகுந்து பாலைநிலத்திற்கும் சென்று ஆனைந்து விற்றனர்.

பாலைநிலத்தார்போற் சூறையாடலையும் போர்புரிதலையும் வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளாது, ஆடவர் ஆடுமாடெருமை யாகிய முந்நிரைகளை மேய்த்தும், வானாவாரிப் பயிர்களை விளைத்தும், பெண்டிர் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய்யாகிய ஆனைந்தைக் குறிஞ்சி பாலை மருதம் ஆகிய முந்நிலத்தும் விற்றும், அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஆயர், தம் மறத்தைக் குன்றாமற் காத்தற்கும் தம் உடல் வலிமையை மேன்மேல் வளர்த்தற்கும், ஏறுதழுவல் என்னும் பெண்கோடல் முறையை ஏற்படுத்தினர்.

ரு

ஆயர் குலத்தில் வினைவல பாங்கரல்லாத உயர்குடியிற் பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும், பிறந்தவுடன் அவ்வப் பெண்ணின் பெயரால் ஒவ்வொரு சேங்கன்று ஒதுக்கப்பெற்றது. அக் கன்றுகளை, வேலையிற் பழக்காதும் விதையடிக்காதும் சிறந்த வூட்டங் கொடுத்து வளர்த்து வந்தனர். அவை கொழுத்துப் பருத்து, காளைப் பருவத்தில், கடைந்தெடுத்த கருங்காலித் தூண்கள் போன்ற கால்களுடனும், உருண்டு திரண்ட உடலுடனும், மதர்த்துச் சிவந்த கண்களுடனும், கண்டார் அஞ்சும் கடுந்தோற்றத்தை அடைந்தன. ஆண்டுதோறும், பூப்படைந்து மணத்திற் கேற்ற கன்னியர்க்குரிய காளைகளை யெல்லாம், கொம்பு திருத்திக் கூராக்கி, ஒரு குறித்த நன்னாளில், அழகாகச் சுவடிக்கப்பட்ட ஒரு தொழுவத்திற்குள் அடைத்து, ஒவ்வொரு குமரியையும் மணக்க விரும்பும் ஆயர்குலக் குமரர் அவ்வக் குமரிக்குரிய காளையைத் தனிப்படப் பிடித்தடக்கி நிறுத்துமாறு, அவற்றைத் திறந்து விட்டனர். அவை இருமருங்குங் கூடிநிற்கும் பெருங்கூட்டத்தைக் கண்டும், அக் கூட்டத்தாரின் ஆரவாரத்தொடு கூடிய பல்லியப் பேரோசையைக் கேட்டும், மருண்டு மிரண்டு, கூற்றுவன் தூதர்போற் கொடிய பார்வையுடன், வாலை முறுக்கியும் காலைக் கிளப்பியும் உடலை வளைத்தும்