பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

கழுத்தைத் திரித்தும், குளம்பு பட்ட விடமெல்லாம் தீப்பறக்கக் குதித்தோடியபோது, ஏறுதழுவுங் குமரர் பலர் எதிர்நின்று கொம்பைப் பற்றியும், அள்ளையிற் பாய்ந்து கழுத்தைத் தழுவியும், பின்சென்று காலை வாரியும், பிறவாறும், தாம் குறித்த காளையை அடக்கிநிறுத்த இயன்றவரை முயன்றனர். சிலர் கண்ட அளவில் அஞ்சி நின்றுவிட்டனர். சிலர் மறு விழாவிற்குக் கடத்தி வைத்தனர். சிலர் சிறு புண்ணொடு திரும்பினர். சிலர் விழுப்புண்பட்டனர். சிலர் குடல் சரிந்து அங்கேயே மாண்டனர். சிலர் வென்றனர். வென்றவர் தம் விலைமதிப்பில்லாப் பரிசைப் பெற்று விண்ணின்பந் துய்த்தனர்.

கடல்கோளின் பின், கடல்கோளச்சத்தாலும் மக்கட் பெருக்கின் விளைவாலும், பெருங்கூட்டத்தார் வடநாவலஞ் சென்று குடிய மர்ந்தனர். அங்குத் தம் தாய்நாட்டை நினைவுகூர்தற்கு, தொழுநை யாற்றங்கரையடுத்து ஒரு நகரமைத்து அதற்கு மதுரை என்று பெயரிட்டனர். அது தென்வாரியில் முழுகிப் போன பஃறுளி மதுரையை நோக்கி, தமிழரால் வடமதுரை எனப்பட்டது. அதனால், பஃறுளி மதுரையும் வடமதுரை நோக்கித் தென்மதுரை யெனப் பட்டது. ஆகவே, ‘வட’,‘தென்’ என்பன உறவியல் அடைகளே என அறிக.

மது என்னும் ஓர் அரசன் பெயரால் அவன் தலைநகர் மதுபுரி எனப்பட்டதென்றும், அது பின்னர் மதுரை-மத்ரா என்று திரிந்த தென்றும் கூறுவது பொருந்தாது.

"மாயனை மன்னும் வடமதுரை மைந்தனை

99

(திவ்.திருப்பா.5) என்று ஆண்டாள் தென்மதுரையொடு ஒப்புநோக்கியே பாடுதல்

காண்க.

ள்

பாண்டியன் கடல்கோட்குப்பின் பனிமலை சென்று அதன் மேற் கயற்பொறி பொறித்து, கங்கையாற்றங்கரை நகரில் தன் உறவினனைத் துணையரையனாக அமர்த்திவிட்டு வந்தது போன்றே, சோழனும் தான் வேந்தனானபின் பனிமலைமேற் புலிப்பொறி பொறித்து, கங்கை நாட்டை ஆளுமாறு ஒரு படிநிகராளியை அமர்த்திவிட்டு வந்தான். இங்ஙனம், பாண்டியர் குடியான திங்கள் மரபும், சோழர் குடியான கதிரவன் மரபும் வடநாட்டில் நிறுவப் பெற்றன.

வடநாடு மொழிபெயர் தேயமாயினும், தமிழரும் அங்குக் குடியிருந்ததனாலும், திரிமொழியாளர்க்கும் தமிழ் ஓரளவு விளங்கியதனாலும், கற்றார் அனைவர்க்கும் தமிழே இலக்கிய மொழியா யிருந்தமையாலும், சேர சோழ பாண்டியம் போலும்