பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




123

சு

வல்லரசு அங்கின்மையாலும், சில்லாயிரம் ஆண்டுகள் தமிழரசு அங்குச் செவ்வன் நடைபெற்றது.

தலைக்கழகத்திற் போன்றே, இடைக்கழகத்திலும் முந்நாட்டை யுஞ் சேர்ந்த தமிழகத் தலைமைப் புலவரெல்லாரும் கலந்திருந்து, முதுநூலாய்ந்தும் புதுநூலியற்றியும் வந்தனர்.

பாண்டிய நாட்டின் பெரும்பகுதியை ஏற்கெனவே கடல் கொண்டதனாலும், கதவபுரம் கடல்வாயி லிருந்ததனாலும், ஆழ் கடலிற் செல்லும் நாவாயும் வங்கமும் போன்ற பெருங்கலங்கள் தமிழகத்திற் புணர்க்கப்பட்டதனாலும், பாண்டியன் முன்விழிப்பா யிருந்து, மறுகடல்கோள் நேரின் குடும்பத்தொடு தப்புமாறு, ஒரு பெருங்கலத்தை என்றும் அணியமாய் வைத்திருந்திருத்தல் வேண்டும். இரண்டாம் கடல்கோள்

தமிழிலக்கியத்திற் குறிக்கப்பட்டுள்ள இரண்டாம் கடல்கோள், தோரா. கி.மு.2500-ல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அக் கடல்கோளால், நாகநாடு என்று சொல்லப்படும் கீழ்த்திசை நிலப்பகுதி, ஏறத்தாழ 1200 கல் தொலைவு பரப்புள்ளது மூழ்கிப்போயிற்று. அதுவே,

தீங்கனி நாவ லோங்குமித் தீவிடை யின்றேழ் நாளி லிருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே பூமிநடுக் குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்

(L0600CLD.9:17-22)

என்று மணிமேகலையில், முன்னறிவிப்புப்போற் கூறப்பட்ட பின்னறிவிப்புச் செய்தி.

கதவபுரமும் குமரியாற்றிற்குத் தென்பால் நிலமும் மூழ்கிப் போயின. இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்துவிட்டது. வங்கக் குடாக்கடல், புதிதாகத் தோன்றியதனால், தொல்கதை (புராண) முறையில் சகரரொடு தொடர்புபடுத்தித் தொடுகடல் எனப்பட்டது. தாடுதல் தோண்டுதல்.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ துருகெழு குமரியின் தெற்குங் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்குங் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

99

(புறம்.6)

என்று காரிகிழார் பாடுதல் காண்க. “உருகெழு குமரி” என்பதற்கு, "உட்குந் திறம் பொருந்திய கன்னியாறு உரையாசிரியர் கூறுவதையும் நோக்குக.

என்றே பழைய