பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

குமரியாறிருக்கவும்

அதன் கயவாயிலிருந்த கதவபுரம் மூழ்கியது, காவிரியாறிருக்கவும் அதன் கயவாயிலிருந்த காவிரிப் பூம்பட்டினம் மூழ்கியது போலாம்.

கோவலன் காலத்திலேயே வங்கக்கடல் இருந்ததனால்தான் அவன் மாமன் மாநாய்கன் (மாநாவிகன்) நீர்வாணிகத் தலைவனா யிருக்கவும், சாதுவன் கலத்திற் சென்று கலத்திற் சென்று கீழைத்தீவுகளுட வாணிகஞ் செய்யவும் இயன்றது.

ன்

கீழ்த்திசை நாட்டார் நாக வணக்கமும் நாகமுத்திரையுங் காண்டிருந்ததனால், நாகர் எனப்பட்டார். அவர் நாடு நாகநாடு எனப்பட்டது. அவருள் நாகரிகரும் அநாகரிகருமாக இருசார் மாந்தரும் இருந்தனர்.

CC

என்றும்,

கீழ்நில மருங்கின் நாகநா டாளும் இருவர் மன்னவர்

(L0600fCLD.9:55)

66

நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன்

99

(மணிமே.24:54-5)

என்றும் குறிக்கப்பட்டவர் நாகரிக மக்கள். "நக்க சாரணர் நாகர்”

என்றும்,

66

நக்க சாரணர் நயமிலர் தோன்றி

(L0600fGLO.16:15)

99

ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும் ” (L0600FCLD.16:56–9) என்றும் குறிக்கப்பட்டவர் நரவூனுண்ணிகளான விலங்காண்டி மாக்கள்.

வங்கக் கடல் தோன்றுமுன் அங்கிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழைக்கரை நெடுகலும் குடியேறியதனால், அவர் சேர்ந்த வூர்கள் நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரி எனப் பெயர் பெற்றன.

“அங்கமெதிர்” என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுளின் (கோபுர.48) சிறப்புரையில் கனகமயமான இலங்கை யென்னுந் தேசம், இரத்னபூமியுடன் கூடி யைஞ்ஞூறு யோசனை சமுத்திரத்துக்குட் புகுந்திருக்குமென்க” என்னுங் குறிப்பும்,

சேண்டொடர் சிமையத் தெய்வ மகேந்திரத்

99

தும்பர்ச் சென்றான்

(கம்பரா.மகேந்.25)