பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

டம்

பழங் காலத்ததாதலின், அதுபற்றிய செய்தி பிறநாட்டு வரலாறுகளில் இட ம் பெறவில்லை. ஆயின், இரண்டாம் கடல்கோட் செய்தி, முதற்கண் பாபிலோனிய நாட்டிலும் பின்னர் யூதேயாவிலும் அதன்பின் பிறநாடுகளிலும் பரவி, அவ்வந் நாட்டுச் செய்தியாக நிலைத்துவிட்டது. பாபிலோனியாவில், கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்பே, கடல்கோள் போன்ற ஒரு தொடர்மழை வெள்ளக் கதை வழங்கி வந்திருக்கின்றது. அதையே யூதர் கொண்டு கூறியதாகத் தெரிகின்றது.

தென் கல்தேயத் தலைநகராகிய ஊர் என்னும் பாபிலோனிய நாட்டுப் பேரூரில், ஆபிரகாம் கி.மு.1996-ல் பிறந்தான். அவன் மரபில் வந்த மோசே (கி.மு.1571-1451) எழுதினதாகச் சொல்லப்படும் திருப்பொத்தகம் (Bible), படைப்பியல் (Genesis) 7ஆம் அதிகாரத்தில் உள்ள வெள்ளக் கதை, பாபிலோனியக் கதைக்கு ஏறத்தாழ 500 ஆண்டு பிற்பட்டது.

வெள்ளக்கதை வழங்கும் நாடுகளிலெல்லாம், கலத்தின் வாயிலாகக் கடல்கோட்குத் தப்பிய பாண்டியன்போல் ஒவ்வொருவன் சொல்லப்படுகின்றான். கல்தேயர்(பாபிலோனிய) நாட்டில் சிசுத்துரசு (Xisuthrus) அல்லது அசிசு அதரா (Hasis Adra); யூத நாட்டில் நோவா (Nova); கிரேக்க நாட்டில் ஒசீசெசு (Ogyges) அல்லது தியூக்கேலியன் (Deucalion); சீன நாட்டில் போகி (Fohi). பிற்காலத்தில் வேத ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின் ஓரளவு உண்மையறிந்ததனால், சத்தியவிரதன் என்னும் திராவிட பதி என்றனர்.

பல்வேறு நாடுகளிற் கடல்கோட்கு அல்லது வெள்ளத்திற்குக் குறிக்கப்பட்ட காலம்:

நாடு

பாபிலோனியா

காலம்

தோரா. கி.மு. 3000 - ற்குச் சற்று முன்பு.

யூதேயா (Bible)

இலங்கை

தமிழகம்

"I

2348

""

2387

""

2500

பாரசீகக்

கிழக்கினின்று

ஓயன்னெசு போன்றே, பலர் குடாக்கடல் வழியாகப் பின்னர் இடையிட்டிடையிட்டு வந்ததாக, பாபிலோனியச் செங்கற் பட்டையங்கள் கூறுகின்றன.

திருப்பொத்தகம் (Bible), படைப்பியல் (Genesis),6ஆம் அதிகாரம் முதலிரு திருமொழிகள், "மாந்தர் ஞாலத்தின்மேற் பெருகத் தொடங்கி, அவர்கட்கு மகளிர் பிறந்தபோது, தேவகுமரர் மாந்தர் மகளிரை மிக அழகுள்ளவரென்று கண்டு, அவர்களுள் தமக்குப்