பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

இதனால், சமயப்பற்றாலும் தமிழர் பலர், சிறப்பாகப் பெருஞ் செல்வர், கங்கை நாட்டிற் குடியேறினர். அதன் விளைவாகத் திருக்கேதாரம், வாரணாசி (காசி) முதலிய சிவநகர்கள் வடநாட்டில் தோன்றின.

காவிரிப் புதல்வர் என்பதுபோல், தமிழக வேளாளருட் சிலர் தம்மைக் கங்கை குலத்தார் என்று சொல்லிக்கொண்டனர். கங்கையம்மன் என்னும் நாட்டுப்புறத் தெய்வமும் தோன்றிற்று.

சிவநெறியார்க்கு நேபாளத்தினின்று அக்கமணி வருவது போன்றே, அரசர்க்கும் தெய்வப் படிமைகட்கும் வீச வெண்கவரியும், கூந்தலில்லாப் பெண்டிர் கொண்டை முடிக்கக் கருங்கவரியும் பனிமலை யடிவாரத்தினின்றும் திபேத்தினின்றும் வந்திருக்கின்றன.

66

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி யயல

தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்றோ யிமயம்

(புறம்.132)

என்பதனால், கவரிமயிர் தரும் எருமை பனிமலை யடிவாரத்திற் புல் மேய்ந்ததைத் தமிழர் கண்ணாரக் கண்டமை அறியப்படும்.

CC

கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசல் மேவற் சேயிழை மகளிர்

99

(பதிற்.43:1-2)

என்பது, பண்டைக்காலப் பெண்டிரும் கவரிமுடி யணிந்ததைத் தெரிவிக்கும்.

கவரிமா என்னும் எருமைக்குக் கியாக்கு (gyak) என்பது திபேத்தில் வழங்கும் பெயர். ஆங்கிலத்தில் அது யாக்கு (yak) என்றும் தமிழில் ஆகு என்றும் திரியும்.

66

99

'ஆகு கவரி சீகரம் சவரி. ”

(பிங்.8:135)

இதில், ஆகு என்பது முதலாகுபெயராக முடியைக் குறித்தது. கவரிமா ஒருவகை எருமையாதலால், கல்லாடர் தமிழ்நாட்டு எருமையையும் கவரி என்று குறித்துவிட்டார்.

"படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும்

99

(கல்லா.53:30)

இதைப் பிங்கலமும் “காரான் மகிடம் கவரி காரா” என்று பின்பற்றிவிட்டது.

வணிகர் மட்டுமன்றி, அடியாரும் புலவரும் அரசரும் படை மறவரும் அடிக்கடி வடநாடு சென்று வந்ததனால், அந் நாட்டு இயற்கையமைப்பும் அரசியலும் மக்கள் வாழ்க்கைமுறையும் சிறப்பு