பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




129

நிகழ்ச்சிகளும், தமிழர்க்குத் தெரிந்து இலக்கியத்திலும் குறிக்கப் பட்டன.

கங்கை சிந்தாறுகளும், சோணை, வாரணை, அசி, தொழுனை முதலிய கங்கைக் கிளைகளும் பண்டைத் தமிழ்ப் புலவர்க்குத் தெரிந்திருந்தன.

கங்கை நாட்டில் முதற்கண் குமரிநாட்டினின்று சென்ற தமிழரே குடியிருந்தமையால், ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் ஊர், நகர், புரம், புரி எனத் தமிழீறே பெற்றன. முதலிற் புரம் என்பது கோபுரமுள்ள நகரையும் புரி என்பது கோட்டையுள்ள நகரையுங் குறித்து, பின்னர்ப் பொது வீறுகளாயின. புரம் = உயர்வு, உயர்ந்த கட்டடம். புரி=வளைவு, வளைந்த (சூழ்ந்த) கோட்டை. பாதிரிபுரம் என்பது பிற்காலத்திற் பாடலிபுரம் எனத் திரிந்தது. காளிவணக்கங் கொண்ட தமிழர் சிலர், வங்கத்திற் குடியேறிக் கங்கைக் கரையிற் காளிகோவிலுடன் அமைத்த நகரே காளிக்கோட்டம். காளி (பாலைநிலத்) தமிழ்த் தெய்வம். காளி கோட்டம் என்னும் இரண்டும் தூய தென்சொல். காளிக்கோட்டம் என்பது, இன்று ஆங்கிலச் சொல் வழியாகக் கல்கத்தா எனத் திரிந்துள்ளது. கங்கைக் கயவாய் அடுத்துத் ‘தம்லுக்’ அல்லது ‘தமுல்க்’ என்னும் பெயர் கொண்டுள்ள துறைநகர்ப் பெயர், தமிழகம் என்னும் சொல்லின் திரிபாயிருக்கலாம். ‘தமலித்தி’ என்று பாலிமொழியிலும், ‘தம்ரலப்தி’என்று சமற் கிருதத்திலும் வழங்கும் இடப்பெயர், தமிழ்நத்தி அல்லது தமிழுலாத்தி என்பது போன்ற தென்சொல்லின் திரிபா யிருக்கலாம். வேம்பாய் (Bombay) மாநிலப் பகுதி முழுதும் பதினெண்குடி வேளிர் பரவியிருந்ததனால், வேளகம் எனப்பட்டது.

கண்ணன் ஆண்ட குச்சரநாட்டு மேற்பகுதியின் தலைநகர்ப் பெயரான துவாரகை என்னும் சால், துவரை என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே. எருமை (மைசூர்) நாட்டுத் துவரை நகரில் கி.பி. 2ஆம் நூற்றாண்டு ஆண்டுகொண்டிருந்த இருங்கோவேள், தன் ஆள்குடியின் 16ஆம் தலைமுறையினன் என்று சொல்லப்படுவதால், அவன் குடி முதல்வன் கண்ணன் காலத்தவனாகவே யிருந்திருத்தல் வேண்டும். அது கி.மு.1000.

66

செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள்

வேளே.........

99

(புறம்.261)

என்று இருங்கோவேள் கபிலரால் விளிக்கப் பெற்றமையையும், அவன் வேள் என்று பெயர் பெற்றிருந்தமையையும் நோக்குக.