பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

ஒட்டர (Orissa) நாட்டுத் தலைநகரின் பெயரான கடகம் (Cuttack) என்னும் சொல், கோட்டை மதிலைக் குறிக்கும் தூய தென்சொல்லே. மதிலாற் சூழப்பட்டதனால் அந் நகர் கடகம் எனப் பெயர் பெற்றது.

இன்று தெலுங்கு நாட்டுப் பகுதிகளாக விருக்கும் நெல்லூர் குண்டூர் மாவட்டங்கள், முன்னர்த் தமிழ்நிலமா யிருந்ததை, அவற்றின் பெயர்களே தெரிவிக்கும். நெல்லூர் மாவட்டத்தூடு ஓடும் வடபெண்ணையாறு, தமிழ்நாட்டுத் தென்பெண்ணை யாற்றுடன் ஒப்புநோக்கி யிடப்பெற்ற பெயர் கொண்டதென்பது சொல்லாமலே அறியப்படும்.

கருநாடகம் (கன்னடம்), துளு, குடகம் முதலிய நாடுகள் கடைக்கழகக் காலத்திலும் தமிழ்நிலங்களாகவே யிருந்தமை, பின்னர் விளக்கப்படும்.

பாண்டியன் வெற்றிச் செயல்

வானியைந்த விருமுந்நீர்ப்

பேஎநிலைஇய விரும்பௌவத்துக்

கொடும்புணரி விலங்குபோழக்

கடுங்காலொடு கரைசேர

நெடுங்கொடிமிசை இதையெடுத்

தின்னிசைய முரசமுழங்கப்

பொன்மலிந்த விழுப்பண்ட

நாடார நன்கிழிதரும்

ஆடியற் பெருநாவாய்

மழைமுற்றிய மலைபுரையத்

துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச்

சீர்சான்ற வுயர்நெல்லின் ஊர்கொண்ட வுயர்கொற்றவ"

(மதுரைக்.75-88)

என்று, மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை, அவன் முன்னோருள் ஒருவன் செய்த வெற்றிச் செயலை அவன்மேலேற்றிக் கூறி விளித்தார். அவ் வெற்றிச் செயல், கடல்கடந்து சென்று, சாவகம் என்னும் சாலித் தீவைக் கைப்பற்றிய தாகும்.

சாலி என்பது செந்நெல் என்று பொருள்படும் தென்சொல். பிற்காலத்திற் பாண்டியனொடு சென்ற பிராமணப் பூசகன் ஒருவன், சாலி என்பது ஒரு தவசப் பெயராயிருத்தலால், அதை வடமொழியில்