பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

ஒரு பருந்தினால் துரத்தப்பட்ட புறா, செம்பியன் என்னும் சோழன் காலடியில் வீழ்ந்தது. அவன் அதைக் காத்தற்கும் பருந்தின் பசியைத் தீர்த்தற்கும், தன் உடம்பினின்று அப் புறாவள வு தசையறுத்துப் பருந்திற் கிட்டான். இச் செய்தி பின்னர்த் தொல்கதை முறையில் விரிவாக்கப்பட்டது.

நிலமிசை வாழ்ந ரலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க

வரையா வீகை யுரவோன் மருக

99

(புறம்.43)

என்று செம்பியன் வழிவந்த சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் விளிக்கப்பட்டமை காண்க. செம்பியன் பெயர் அவனுக்குப் பிற்பட்ட சோழர்க்கு ஒரு குடிப்பெயராயிற்று.

அக்காலத்தில் இலங்கையில் அரக்கர் என்றும் இயக்கர் என்றும் இருவகுப்பார் இருந்திருக்கின்றனர். அவர் மாயக்கலையில் வல்ல வராயிருந்ததனால், பிற்காலத்தில், ஆரியத் தொல்கதைஞர், அவரை வானியங்கும் அல்லது மக்களினத்திற்கு அப்பாற்பட்ட பதினெண் கணத்தாருள் இரு கணத்தாராகக் கொண்டனர் போலும்! அரக்கர் அரசன் இராவண்ணன். அவன் தலைநகர் இலங்கை. இயக்கர் அரசன் பிங்கலன் (குபேரன்). அவன் தலைநகர் அளகை. அவன் மாபெருஞ் செல்வன். சங்கம் தாமரை என்னும் பேரெண்களின் அளவுகொண்ட இரு பொக்கசம் (நிF) ஈட்டி வைத்திருந்ததாகச் (நிதி) சொல்லப் படுகின்றான். இரு என்னும் சொல்லிற்குப் பெரு என்றும் இரண்டு என்றும் பொருளுண்டு. அச் சொல் நிதி என்னும் வடசொல்லைத் தழுவும்போது, இடையில் மகரமெய் தோன்றா தாதலால், இருபொருட்கும் பொதுவாக நிற்கும். அதனால், இருவேறு பொக்கசம் என்று தொல்கதைஞர் கொண்டிருக் கலாம். உண்மையில் இருவேறு பொக்கசமாயின், ஒன்று மூலபண்டார ர மாகவும் இன்னொன்று வழங்கும் பண்டாரமாகவும் இருந்திருத்தல் வேண்டும்.

அரக்கருக்கும் இயக்கருக்கும் நெடுநாட் பகையிருந்து வந்தது. இறுதியில் மூண்ட கடும்போரில், இயக்கர் குலம் வேரறுக்கப் பட்டது. பிங்கலன் தப்பிப் பனிமலைக்கு ஓடிப்போய்விட்டான். பிற்காலத்தில் ஓர் இயக்கி (இயக்கப் பெண்) தமிழகத்தில் நாட்டுப்புறத் தெய்வமும் ஆனாள்.