பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




133

66

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி யென்போள்

என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க.

""

(சிலப்.15:116-8)

இலங்கை, தொன்றுதொட்டு, மருமம் மிக்க அருங்கட்டட வினைகட்குச் சிறந்ததா யிருந்துவந்திருக்கின்றது.

மாந்தை (மாதோட்டம்) என்னு மிடத்தில், இரும்பினாற் செய்த 'காந்தமலை' என்னும் காந்தக் கோட்டை யிருந்ததாகவும், அக் கோட்டையி லுள்ளார் அண்மையிற் செல்லும் கப்பல்களை யெல்லாம் காந்தத்தா லிழுத்துக் கொள்ளையடித்ததாகவும், மாந்தைப்பள்ளு, விசுவபுராணம், விசுவகர்ம நாடகம் என்னும் பனுவல்களிற் சொல்லப் பட்டுள்ளது.

99

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த (சிலப்.ஆய்ச்சி. படர்க்.1) என்பதனால், ஆரெயில் முழுமுத லரணம் ஒன்று அங்கிருந்ததாகத் தெரிகின்றது.

அசுரர் என்று தொல்கதைஞர் கூறும் இலங்கை அரக்கர், அந்தரத்தில் தொங்குமாறு மூன்று அரணான கோட்டைகளை அமைத்து இருந்திருக்கின்றனர். அவற்றை ஒரு சோழன் அழித்து, “தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்" என்னும் விருதுப் பெயர் பெற்றான்.

66

66

ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல் தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர்’

99

(புறம்.39)

என்பது செம்பியன் செயலை அவன் பின்னோர்மேல் ஏற்றிக் கூறு கின்றது.

66

தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை என்பதும் அதுவே.

66

99

ஒன்னார், ஓங்கெயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும் தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை

நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

என்பது சிறுபாணாற்றுப்படை

சேரன் அருஞ்செயல்

(79-82)

கரும்பு முதலில் நியூகினியாவில் இயற்கையாக விளைந்த தென்றும், பின்னர்ச் சீனத்திற்கும் அதன்பின் பிற நாடுகட்கும்