பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் ‘த்வீப’ என்று திரித்து, இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே.

ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால்(தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ் சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது.

நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.

'நாவலந் தீவே இறலித் தீவே

குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே சான்மலித் தீவே தெங்கின் தீவே புட்கரத் தீவே எனத்தீ வேழே

ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்”

என்பது திவாகரம். கிரவுஞ்சம், சான்மலி, புட்கரம் என்பன முறையே, அன்றில், இலவம், தாமரை என்பவற்றின் மொழிபெயர்ப்பான வடசொல்லாம். நாவல் என்பதைச் சம்பு என மொழிபெயர்த்தனர் வடவர். அன்றில் என்பது ஒரு பறவை வகை.

தெங்கந்தீவு என்பதையே எழுதீவுகளுள் ஒன்றாகத் திவாகரமும் பிங்கலமும் சூடாமணியும் கூறியிருப்பவும், அதற்குப் பகரமாகத் தேக்கந்தீவு என ஒன்றைக் குறித்ததோடு, அதைப் பிங்கலமென்றுங் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி. தெங்கந் தீவு என்பதைத் தேக்கந்தீவு எனத் தவறாகப் பாடங்கொண்டு, அதற்கேற்பச் ‘சாகத்வீப' என வடமொழியில் தவறாக மொழி பெயர்த்ததைச் சரிப்படுத்த வேண்டிச் சென்னை யகரமுதலி அவ் வழியை மேற்கொண்டது போலும்! ஆரியர் குமரிநாட்டுத் தமிழர்க்குக் காலத்தால் மிகமிகப் பிற்பட்டவராதலின், எழுதீவுக் கருத்தைத் தமிழிலக்கியத்தினின்றே கொண்டிருத்தல் வேண்டும்.

தீவு என்னும் பெயர், நாவலந்தீவு ஆப்பிரிக்காவினின்றும் பிரிந்துபோன நிலையைக் காட்டும்.

1.

2.

3. நாவலந்தீவின் முந்நிலைகள்

பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தொடு அல்லது பழம்

பாண்டிநாட்டொடு கூடியது.

பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம் பாண்டிநாடும் .