பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




LO

5

கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப் படுகின்றன.6

குமரிக்கண்ட நால்நிலைகள்

1.

2.

3.

4.

ஆப்பிரிக்காவொடும், ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு.

ஆப்பிரிக்கா நீங்கிய பழம் பாண்டிநாடு.

ஆத்திரேலியாவும் நீங்கிய பழம் பாண்டிநாடு. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்த பழம் பாண்டிநாடு.

தென்னிலம்

5. மாந்தன் பிறந்தகம்

ரு

ம்

மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான டமாற்றங்களும் பற்றிய கருதுகோள்: "மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையை நெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக்கூடியபடி) அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும் (Further India) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்த தென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல் உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாக வுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா (Lemuria) எனப் பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக் கொள்வோ மாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறி யிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்.

997

"மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரை யிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ் விடங்கட்குச் சென்றிருந்தார் என்பது, எவ் வகையிலும் நடந்திருக்கக்கூடாத செய்தியன்று என்பதைக் காட்டும். இந்தியக் கீழ்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்

6. கால்டுவெல்.

7. M.A.M. P. பக் : அடிக்குறிப்பு(2)