பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரிய காலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததா யிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்.

998

இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய ‘நிமிர்ந்த குரக்கு மாந்தன்' (Pithecanthropos Erectus) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா.இலீக்கி (Prof.Leakey) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய ‘நெற்றுடைப்பான்' (Nut cracker Man or Sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப் படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித்தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்த பெருநாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்திலேயே மாந்தன் தோன்றினானென்றும், அத் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், மறுப்பச்ச மின்றிக் கூறலாம்.

ன்

உயிரினங்களின்

இடம்பெயர்வும் பாதீடும்' பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டி ருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல், "இந்துமா வாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரைவரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. கிளேற்றர் இப் பழங்காலப் பெருங்கண்டத் திற்கு, அதில் வதிந்த குரங்கொத்த உயிரிபற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக்கூடுமாதலின், மிக முதன்மையானதாகும்' என்று

கூறுகின்றார். தொன்னிலம்

நிலவியல் வரலாற் றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ் ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (John England) என்னும் ஆராய்ச்சியாளர், “கோடி யாண்டுகட்குமுன், ஒருகால்

8. M.A.M. P.,

-

U. 111.

9. C.T.S.I Vol. 1, ப.20.