பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தி யாவையும் இணைத்திருந்தது” என்பர்.

இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனிமலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகியவற்றின் பாறை வகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றியதென நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

ண்ணிலம்

முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமைகளை நோக்கின், இஞ் ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இட ம் குமரிக்கண்டமே. நண்ணிலக்கோடு (Equator) அதனூடேயே செல்வதைத் திணைப்படத்திற் (Map) காண்க.

முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரைமயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்பநாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும்.

ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் ருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக.

வண்ணிலம்

முதற்கால மாந்தன் காட்டுவிலங்காண்டியாகவும் அநாகரிக னாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக்கண்டமே.

ஏதேன் (Eden) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும். ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல். பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியா விற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது. நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (Pacific Ocean) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப்படும் மெசொப்பொத்தேமியாவும் கடலடியில் இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்டமிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ள முடியாது. அதை வளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (Euphretes) பஃறுளிபோற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும்

7