பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11

வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந் திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான். முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர்நிலையையுமே சார்ந்திருந்ததனாலும், மரஞ்செடிகொடி யடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறு வழி அவனுக்கின்மையாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோரமாகவே இடம்பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

7. தமிழன் பிறந்தகம்

தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்:

1.

தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிடமொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கிற் செல்லச்செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும்.

2. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிடமொழி யின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேர் அல்லது வேர்ப்பொரு ளிருத்தலும். தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும், அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந் நாட்டின் தென்கோடியிலிருத்தலும்.

3.

4.

5.

தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச்செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்குண்மையும்.

வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வன்மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள்