பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது.

வரலாற்று மூலங்கள் (Sources of History)

பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்:

1. தொல்பொருள்கள் (Antiquities)

பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன.

2. இலக்கியம்

வட்டெழுத்து (Epigraph), திருமுகம் (Royal letter or order), திருமந்திர வோலைச்சுவடி, நாட்குறிப்பு (Diary), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன.

வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (சுடுமுன்) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பல திறப்படும்.

3. செவிமரபுச் செய்திகள் (Traditions)

4.

5.

பழக்கவழக்கங்கள்

மொழிநூற் சான்றுகள்

6. நிலநூற் சான்றுகள் (Geological evidence)

7.

கடல்நூற் சான்றுகள் (Oceanographic evidence)

மக்கள்

நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவதனாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள்மண்டை (Dolichocephalic), குறுமண்டை (Brachycephalic), இடைமண்டை (Mesaticephalic) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனை யுறுப்புகளும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும், மாந்தன் மெய்யளவியலும் (Anthropometry), குலவரை குலவரைவியலும் (Ethnography) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள்போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல.

தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று