பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

19

(Archaeological evidence) இன்று அறவே இல்லாத தாயிற்று. நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலைகளிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும் போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே. அவர் மொழிகளெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரி நாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்துநிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலைநிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கைநிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது. எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம். நாகரிகம் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புலைமகளிர் கோரையுடையும் அணிந் திருந்தனர். இதனால் தமிழப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக்கணக்கான ஆடை வகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைக ளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின.

துடவரையும் கோத்தரையும் முந்தியல் (Primitive) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (Haeckel) கூறுவதும், திரு. புரூசு பூட்டு (Bruce Foote) தொகுத்த பழம் பொருள்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்சநல்லூர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும். மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர்.புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக் கழகக் காலத்தில் ஓரி, பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினரு மாகிய நாகரிக மக்களே பறம்பு, கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென் மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரி மாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காணமுடியாது. இன்று இ கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன்படுத்தினவையே.

இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமையாலும்; அவற்றிற்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ்நூல்களும்