பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (Dynasty) வாரியாகவும், ஆள்நில (Territory) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றாசிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப்பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும்.

66

“கி. பி. 900-க்கு முற்பட்ட தென்னாட்டுத் தமிழரையங்களின் துல்லியமான காலக்குறிப்போடு கூடிய தூய கிளத்தியல் (Narrative) அரசியல் வரலாற்றை இன்றெழுத வியலாது. இதற்கு மறுதலையாக, துல்லியமான காலக்குறிப்பை நீக்கியமைவோ மாயின், திரவிடரின் குமுகாய வரலாற்றைத் தொகுத்து வரைதற்கு வேண்டிய கருவிச் சான்றுகள் பேரளவில் உள்ளன என நம்பு கின்றேன். அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழிகளிலும் இலக்கியங்களிலும் பழக்கவழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணையாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற் காணவுஞ் செய்யும்” என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க. அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளி வந்துள்ளமையால். இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும்.

L

10

தமிழ்மொழி, குமரிநாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன்முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கையாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிக வளங்குன்றியுள்ள இந் நிலையிலும், தமிழரின் கொள்கை கோட்பாடுகளையும் நாகரிகப் பண்பாடு களையும் மதிநுட்பத்தையும் பேரளவு தெரிவிப்பதனாலும்; எழுவகை வரலாற்று மூலங்களுள்ளும் தலைசிறந்தது மொழியியலே யாம். அதனால், பெரும்பால் அதனையும், சிறுபால் இலக்கியத்தில் ஆங்காங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளையும், துணைக்கொண்டே இந் நூல் எழுதப்படுகின்றது.

தொடக்கந்தொட்டு இன்றுகாறும் தமிழ்மக்கள் வரலாற்றையே இந் நூல் கூறுவதால், கிளத்தியல் முறையல்லாது வண்ணனை (Descriptive) முறையிலேயே இருக்குமென்றும், நாகரிகக் காலத்திற்கு

10. Early India, PP. 7 & 8