பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




23

முந்திய கற்காலச் செய்திகள் சில உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்த உய்த்துணர்வாகவே யிருத்தல் கூடுமென்றும் அறிதல் வேண்டும்.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ்க்காலச் செய்தி களைக் கூறும் தனிநிலைக் காண்டம், ஆரியர் வந்தபின் ஆரியச் சொல்லுங் கருத்தும் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கையிலும் கலந்ததைக் கூறும் கலவுநிலைக் காண்டம், ஆங்கிலர் வந்தபின் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் தமிழர் உள்ளமும் ஆரியக் கலப்பு நீங்கித் தெளிந்ததைக் கூறும் தெளிநிலைக் காண்டம் என முப்பெரும் பகுதிகளைக் கொண்டது இந் நூல்.