பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




25

அவர் உண்டவுணவு பச்சையும் சுட்டனவுமான இயற்கை விளைவுகளும் வேட்டைக் கறியும் ஆகும். வேனிற் காலத்தில் மூங்கிலும் மரங்களும் உராய்ந்து பற்றிய நெருப்பில் அகப்பட்டுச் செத்த விலங்கு பறவையூன், சுவையாகவும் மெதுவாகவும் இருந்தது கண்டு, வேட்டைக்கறியைச் சுட்டுத் தின்னும் பழக்கத்தை மேற் கொண்டிருத்தல் வேண்டும்.

தழைத்தொடையும்

அவர் உடுத்திய உடை, கோரை தையிலையும், மரப்பட்டையும் விலங்குத்தோலுமாகும். ஆப்பிரிக்க அநாகரிக மாந்தர், இந் நூற்றாண்டு முற்பகுதியிலும், சில மரப் பட்டைகளை ள ஊறவைத்துத் தட்டி விரிவாக்கி ஆடையாக அணிந்தனர். குமரிநாடு தென்னாப்பிரிக்காவுடன் ணைந் திருந்ததனால், குமரி நாட்டு மாந்தரும் அநாகரிக நிலையில் அத்தகைய மரவுரியை அணிந் திருத்தல் வேண்டும்.

அவர் உறையுள் (தங்குமிடம்) மலைக்குகை, பல்கவர் மரக்கவடு, பரண், கல்லால் அமைத்த வளிமறை' ஆகியவை.

அவர் அணிந்த அணிகள், மருக்கொழுந்து போலும் நறுந்தழை, மணமுள்ள அல்லது அழகிய மலர், மயிற்பீலி, சேவலிறகு, புலிப்பல் தாலி முதலியன.

அவர் புழங்கிய நீர்க்கலம் மூங்கில் நாழியும் சுரைக்குடுக்கை போன்ற நெற்றுக் கூடும்.

அவர் மணமுறை, பருவம் வந்தபின் பெரும்பான்மை ஆண் பாலார், ஒரோவிடத்துப் பெண்பாலார், இணைவிழைச்சு வேட்கை நேர்ந்த போதெல்லாம் எதிர்ப் பாலாரை இசைவித்தோ இசையுமாறு வற்புறுத்தியோ வலிந்தோ புணரும் பொதுமணம் (promiscuity) ஆகும். கூடிவாழும் குடும்ப வாழ்வு அவரிடை யில்லை. அதனால், ஒரு தலைவனுக்குக் கட்டுப்பட்ட குடிவாழ்வும் (community life) அவரிடை யில்லை. விலங்குகளும் சில பறவைகளும்போல், பகலில் உணவு தேடி யுண்பதும், பழகிய விடத்தில் இராத் தங்குவதுமே அவர் இயல்பா யிருந்தது.

கொடிய விலங்குகள் எதிர்ப்பட்டபோது அல்லது இருப்பிடம் வந்து தாக்கியபோது, அவர் தம்மிடமுள்ள கற்கருவியுந் தோமரமுங் காண்டு சிலவற்றை எதிர்த்துக் கொன்றிருத்தல் வேண்டும்; கொல்லமுடியாத வலியவற்றிற்கு மரத்தின்மீதேறியோ புதருள்ளும் பொதும்பருள்ளும் மறைந்தோ தப்பியிருத்தல் வேண்டும்; அரிமாவும் யானையும் போன்றவற்றை இராக்காலத்தில் தீ வளர்த்து விரட்டி யிருத்தல் வேண்டும். மாடுகளொடும் பகைவரொடும் போரிட நாகரைப்போல் தலையிலுங் கொம்புகளை அணிந்திருக்கலாம். 1. காற்றை மறைக்கும் சிறு குடில்