பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

முதற்காலத்தில் தீயைக் கண்டு மிகமிக அஞ்சினாரேனும், பின்பு

மெல்ல மெல்ல அதன் பல்வகைப் பயன்பாட்டைக் கண்டு, விலங் காண்டி மாந்தரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அணுகாதும் அகலாது மிருந்து குளிர்காய்தல், இறைச்சி சுடுதல், இருள் நீக்கல், குளவியைக் கலைத்துத் தேனெடுத்தல், கொடுவிலங்கு வெருட்டல் முதலியன தீயின் பயன்கள். நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropus Erectus) என்னும் சாலி (சாவக) மாந்தனினும் முந்தியவனான பீக்கின் மாந்தன் என்னும் சீன மாந்தன் (Sinanthropus Pekinensis), நெருப்பைத் தன் குகையில் வைத்துப் பயன்படுத்தியதாகச் சால்லப்படுவதால், சாலிமாந்தனை யொத்த குமரிமாந்தன் நெருப்பைப் பயன்படுத்தியதில் வியப்பொன்று மில்லை.

நன்மையோ தீமையோ இரண்டுமோ செய்தவற்றையும் செய்வதாகக் கருதப்பட்டவற்றையும், முதற்கால மாந்தர் தெய்வமாக வணங்கி வந்தனர். அவை தீ, கதிரவன், திங்கள், இறந்தோர் ஆவி, பேய், நாகம் முதலியன. தெய்வம் என்னும் பெயர் தீயைக் குறிக்குஞ் சொல்லினின்று தோன்றியதே. மரங்களின் உராய்வு, இடி, மின்னல் ஆகிய மூவகைகளில் இயற்கைத் தீ உண்டாயிருத்தல் வேண்டும். தீப்பற்றி யெரியுங் கிளைகளினின்று, கொள்ளிக் கட்டைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டுபோய்ப் பழங்கற்கால மாந்தர் பயன்படுத்தி யிருத்தல் வேண்டும்.

மரந்தொறும், மலைதொறும், நீர்நிலைதொறும் ஆவி அல்லது பேய் குடிகொண்டிருந்ததாகவும், பழங்கால மாந்தர் நம்பினர்.

இறந்தவ ருடம்பைக் குடியிருப்பிற்குச் சற்றுத் தொலைவான இடத்திலுள்ள குழியிலிட்டு, காகங்கழுகும் நரியோரியும் ன்னாவாறு மண்ணால் மூடிவிடுவது அவர் வழக்கம்.

மொழித்துறையில், இயற்கை மொழி (Natural Language) அல்லது முழைத்தல் மொழி (Inarticulate Speech) என்னும் முந்து மொழிக்குரிய, (1) உணர்வொலிகள் (Emotional Sounds)

(2) விளியொலிகள் (Vocative Sounds)

(3) ஒப்பொலிகள் (போலிச் செய்கையொலிகள் - Imitative Sounds) (4) குறிப்பொலிகள் (Symbolic Sounds)

(5)

வாய்ச்செய்கை யொலிகள் (Gesticulatory Sounds)

(6) குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)

(7) சுட்டொலிகள் (Deictic Sounds)

ஆகிய எழுவகை யொலிகளும், பழங்கற்காலத்திலேயே முறையே தோன்றியிருத்தல் வேண்டும். அதன் இறுதிக் காலத்தில் ஆத்தி