பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

கிடவாது வெட்டவெளியான நிலமெல்லாம், கண்ணிற்குப் புலனான தனால், புலம் எனப்பட்டது.

CC

99

66

புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்

99

புலங்கெட விறுக்கும் வரம்பில் தானை

என்னும் அடிகளை நோக்குக.

(umin. 109:2)

(புறம்.16:9)

விளைநிலத்திலும் வீட்டிலுமுள்ள கூலங்களை எலிகள் தின்று கெடுத்ததனால், அவற்றைக் கொல்லக் காட்டுப்பூனையையும்; ஆடுகளை நரிகள் பிடித்துத் தின்றதனால், அவற்றை விரட்டி மந்தையைக் காக்கக் காட்டு நாயையும் வீட்டிற் பழக்கினர்.

நிலத்திற் பூசிப்பூசி மெத்தென்று நடப்பதால், பூனை பூசை யெனப்பட்டது. பூசு-பூசை-பூனை-பூஞை. நாய்க்கு ஆட்பற்றுப் போல் பூனைக்கு இடப்பற்று மிகுந்திருப்பதால், தொல்வர வுணர்ச்சி மிக்க ஆண்பூனை பருத்துக் கொழுத்த நிலையில் இன்றும் காட்டிற்குச் சென்று, கண்டார் அஞ்சத்தக்க வெருகாகிவிடுகின்றது. வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் வெருக்கு விடையன்ன வெருணோக்கு பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரைய

CC

66

CC

99

99

99

(தொல்.மர.19)

(புறம்.324)

(புறம்.117)

என்பவற்றால், தமிழகத்திற் காட்டுப்பூனை தொன்றுதொட்டு இருந்து வருவதை அறியலாம்.

இனி, மேலையாரியப் பூனைப் பெயர்கள் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருத்தலால், தமிழகத்தினின்றே பூனை ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது.

பூசை-E.puss-pussy, MLG. pus, Norw. puse, Du. poes, இதன் மூலம் தரியவில்லை யென்றும், ஒருகால் முதற்காலத்தில் இது ஒரு பூனை விளிச்சொல்லா யிருந்திருக்கலா மென்றும், எருதந்துறை (Oxford) ஆங்கில அகரமுதலி கூறுகின்றது. நெல்லை வட்டாரத்தில் இன்றும் பூனையைப் பூசுபூசு என்று அழைப்பதைக் காணலாம்.

கொத்தி (1.)—E.cat, OE. catte, ME. catt(e), LL. cattus, catta, ONF. cat, F. chat, ON. kottr, OHG. kazza. கொத்தை=குருடு, குருடன். பூனைக்குப் பகலிற் சரியாகக் கண் தெரியாமையாற் கொத்தி யெனப்பட்டது. இதன் விரிவை என் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி'யிற் காண்க.

முல்லைநிலத்தை உழக் கலப்பையையும், வேட்டையாடற்கு வளரி-வணரி (வளைதடி), கவண், வில் முதலிய கருவிகளையுங் கையாண்டனர். கல்லோடு மரம், கொம்பு, மருப்பு (தந்தம்), எலும்பு முதலியனவும் முதற் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. மாட்டுக்