பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

ஆடு டு மாடு உடும்பு முதலியவற்றின் தோலை மரத்திலும் கலத்தின் வாயிலும் கட்டி உலர்த்தியபோது, குச்சுங் கையும் பட்டு இன்னோசை யெழுந்ததைக் கண்டு துடி, தொண்டகம் முதலிய தோலிசைக் கருவிகளும்; வண்டினால் துளைக்கப்பட்ட மூங்கிற் குழாயிலும் நாணல் தட்டையிலும் காற்றுப் புகுந்தபோது, இனிதாய் ஒலித்ததைக் கண்டு புல்லாங்குழலும்; முறுகக்கட்டிய வில்லின் நாண் தெறித்தபோது, இன்னிசை பிறந்ததைக் கண்டு வில் யாழ் என்னும் நரப்பிசைக் கருவியும்; நாளடைவிற் புதுக் கற்கால மாந்தர் புனைந்து கொண்டனர்.

இன்பத்திற்கு மட்டுமன்றி, வேளைக்கு வேளை வேளை உண்டி சமைக்கவும், தொழிலுக்குத் துணையாயிருக்கவும், உடைமைகளைப் பாதுகாக்கவும், நோய்நிலையில் நலம் பேணவும், ஒரு பெண் நிலையாக வீட்டிலிருக்க வேண்டியிருந்ததால், வீட்டு வாழ்க்கை ஏற்பட்டபோதே, ஓர் ஆடவனும் பெண்டும் கூடிவாழும் கூட்டு வாழ்க்கையும் ஏற்பட்டது. அது இல்வாழ்க்கை யென்று பொதுவாகச் சொல்லப்படினும், கூட்டு வாழ்க்கைக்கும் குமுகாய வாழ்க்கைக்கும் உரிய இன்றியமையாத அறங்களைத் தழுவியதால், இல்லறம் எனச் சிறப்பித்துச் சொல்லப்பெறும்.

அக்காலம் இல்வாழ்க்கைத் தொடக்கக் காலமாதலால், பன் மனை மணமும் (polygamy), தீர்வை (divorce) முறையும் பெரு வழக்கா யிருந்தன. பெற்றோரும் பெண்ணும் இசையாதவிடத்து வன்கவர்வும், கள்ளக்கடத்தமும், சூளுரைத்துப் பெண்ணொடு கூடியபின் சூளை மறுத்தலும், நிறைவேற்றாமையும், பலரறியக் கூடியபின் ஒரு பெண்ணைக் கைவிடுதலும் அடிக்கடி நிகழ்ந்தன.

களவாகக்

கணவனும் மனைவியுங் கூடியே மகப்பெறினும், வெளிப்படை யாகச் சூல்கொண்டு பத்து மாதம் இடர்ப்பட்டுச் சுமந்து பெரு நோவொடு பிள்ளை பெறுவதால், பிள்ளைகளின்மீதுள்ள உரிமையும் அதிகாரமும் நெடுங்காலம் தாய்க்கே இருந்துவந்தது. இதில் தந்தைமார் தமக்கும் பங்கு கோடற்கு, 'ஈனியற் படுக்கை' (Couvade) என்னும் ஒரு வலக்காரத்தைக் கையாண்டனர். அஃதாவது, மனைவி பிள்ளை பெற்றவுடன், கணவனும் அவளைப்போல் நோவுற்றதாக நடித்துப் படுத்துக்கொண்டு, தனக்கு மகப்பேற்று மருத்துவம் பார்க்கச் சொல்வது. “குறத்தி பிள்ளை பெற, குறவன் காயந் தின்றானாம்” என்னும் தமிழ்ப் பழமொழி, இன்றும் பண்டை ஆப்பிரிக்க மாந்தரின் வழக்கத்தை யொத்த வினை குமரிநாட்டிலும் இருந்ததைக் குறிப்பாக உணர்த்துகின்றது.

இல்வாழ்க்கையும் நிலையான கூட்டுக் குடியிருப்பும் ஏற்பட்டதனால், ஆங்காங்குப் பற்பல வூர்கள் தோன்றிப் பெருகின. ஒவ்வோர் ஊரிலும் குடிவாணர் பெரும்பாலும் பல்தலைமுறைப்