பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




31

பட்ட ஒரே மாபெருங் குடும்ப வுறவினரா யிருந்ததனால், அக் குடும்ப முதியோனே தலைவனாயிருந்து, குற்ற வழக்குத் தீர்த்துத் தண்டித்தும் முறைசெய்தும் வந்தான். அக்காலத்தில் மக்கள் வாழ்வு நீண்டிருந் ததனால் மகன், தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன் (சேயான்) என்னும் ஐந்தலைமுறையினரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தனர்.

ஆடுமாடுகட்குப் புல்விளையவும் வானாவாரிப் பயிர்களை விளைவிக்கவும் மழை இன்றியமையாததா யிருந்ததனால், மழைத் தெய்வம் அல்லது முகில் தெய்வம் பழங்கற்காலத் தெய்வங்களுடன் புதிதாகவும் சிறப்பாகவும் வணங்கப்பெற்றது. குமரி மொழி, முழைத்தல் மொழிநிலையினின்று இழைத்தல் மொழியில் (Articulate Speech),

(1) அசைநிலை (Isolating or Monosyllabic Stage) (2) புணர்நிலை (Compounding Stage) (3) கொளுவுநிலை (Agglutinative Stage)

(4) பகுசொன்னிலை (Inflexional Stage)

என்னும் நால்நிலைகளைப் புதுக்கற்காலம் முடியுமுன் கடந்திருத்தல் வேண்டும். அன்று கருத்தெழுத்துத் (Ideograph) தோன்றியிருத்தல் வேண்டும்.

அசைநிலைக் காலத்திற் சீனரின் முன்னோரும், கொளுவுநிலைக் காலத்திற் சித்தியரின் முன்னோரும், பகுசொன்னிலைக் காலத் தொடக்கத்திற் சுமேரியரின் முன்னோரும், குமரிநாட்டினின்று பிரிந்து போயிருத்தல் வேண்டும்.

சுமேரியர் பிரிந்துபோனதை இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய 'தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக. நகர் என்று பொருள்படும் 'ஊர்' என்னும் பாபிலோனிய நகர்ப்பெயர் தமிழாயிருப்பதையும், அப்பன் என்னும் முறைப்பெயர் கல்தேயர் (Chaldees) அல்லது பாபிலோனியர் மொழியில் ஆப் என்று திரிந்திருப்பதையும் நோக்குக.

தீயுண்டாக்கல், சமைத்தல், வானாவாரிப் பயிர் விளைத்தல், கால்நடை வளர்ப்பு, நெசவு, இல்வாழ்க்கை, ஊராட்சி, இழைத்தல் மொழியமைத்தல், கருத்தெழுத்தைப் பயன்படுத்தல் என்பன புதுக்கற்கால மாந்தரின் அறிவுநிலையைக் காட்டும்.

கற்கால மாந்தரிடை வகுப்பு வேறுபாடின்மை

கற்கால மாந்தர் பழங் கற்காலத்திற் குறிஞ்சிநிலத்திலும் புதுக் கற்காலத்திற் குறிஞ்சியிலும் அதையடுத்த முல்லைநிலத்திலும் வதிந்தாரேனும், திணைநிலம்பற்றியோ தொழில்பற்றியோ தெய்வ