பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




33

ஆரியராலும் அவரடியாராலும் மறைக்கப்பட்டுள்ள வுண்மை வெளிப்பட்டபின், மேலையரும் என் கூற்றை ஒப்புக்கொள்வது

திண்ணம்.

பொற்காலம் என ஒன்று, தமிழகம் தவிர வேறெந் நாட்டிற்கும் இருந்ததில்லை. பிற நாடுகளிலெல்லாம், பொற்காலம் என்பது அணியியற் பொருளில், ஒழுக்கத்திலும் செல்வத்திலும் கல்வியிலும் தலைசிறந்த காலத்தைக் (Golden Age) குறிக்குமேயன்றி, செஞ்சொற் பொருளில் பொற்கருவிகளே வழங்கிய காலமொன்றைக் குறிக்காது. தமிழ்நாட்டிற்குள்ள பல்வகைத் தனிச் சிறப்புகளுள் பொற்காலமும் ஒன்றாகும். பொலிவுற்றது பொன்னெனப்பட்டது. பொல்-பொலி- பொலிவு. பொல் - பொற்பு. பொல்லுதல் = அழகாதல், பொலிதல். பொற்ற = அழகிய, சிறந்த, பொன்னாலான. பொல்-பொன். பொல் -

பொலம் -பொலன்.

குமரிநாட்டிற் பொற்கால மிருந்தமைக்குச் சான்றுகளாவன:

அதன்

(1) பொன்னின் பெயர் மாழைப் பொதுப்பெய ரானமை. தமிழரால் முதன்முதற் கண்டுபிடிக்கப்பட்ட மாழை (metal) பொன்னாதலால், பெயரே பிற்காலத்திற் கண்டுபிடிக்கப்பட்ட பிறவற்றிற்கும் பொதுப்பெயராயிற்று. செம்பொன் = செம்பு, வெண்பொன் = வெள்ளி, கரும்பொன் =

எ-டு டு :

=

இரும்பு.

"துாண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று" என்னுங் குறளடியில் (931), பொன் என்னுஞ் சொல் அடையின்றியும் இரும்பைக் குறித்தது. நாக (ஈய) மணல் பொன்வித்து எனப்படும்.

(2) கடைக்கழகக் காலத்திலும் பொன் மிகுதியாக வழங்கினமை. அக்காலத்துக் காசெல்லாம் பொன்னாயிருந்தமையால், காசு பொன் என்றும், பணமுடிப்பு பொற்கிழி என்றும், பணத்தண்டம் பொன் தண்டம் என்றும் சொல்லப்பட்டன. அரசர் தம்மைப் பாடிய புலவர்க்கு இலக்கக்கணக்கிற் பொற்காசை வாரி வழங்கினர். கடியலூர் உருத்திரங்கண்ணனார் கரிகால் வளவனைப் பாடிப் பதினாறிலக்கம் பொன் பெற்றார். காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பாடி, நாற்பதிலக்கம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பெற்றார். காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பாடி, அணிகலனுக்கென்று 9துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பெற்றார். கபிலர் செல்வக் கடுங்கோ வாழி யாதனைப் பாடி ஓரிலக்கம் பொற்காசும் ஒரு நாடும் பெற்றார். அரிசில்கிழார் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறையைப் பாடி, தொண்ணி