பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, இதைப் பின்பற்றிப் பொன்னேர் என்பதற்கு, “பருவ காலத்தில் நல்ல நாளில் முதன் முறையாக உழுங் கலப்பை” என்று விளக்கங் கூறியுள்ளது.

பண்டை மகதநாட்டூர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சா லோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுவதால், குமரிநாட்டில் அதற்கு மூலமான வழக்கம் இருந்திருக்கலாமென்று கருத இடமுண்டு.

உருவப் பஃறே ரிளஞ்சேட் சென்னி பொற்றேரை யுடைய வனாயிருந்தான்.

66

பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கடல் நிவந்தெழுதருஞ்

செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ

99

(புறம்.4)

என்று பரணர் பாடுதல் காண்க. பண்டைத் தமிழரசரின் தேர் குதிரை யானைகள் பொற்படைகளால் அணிசெய்யப் பெற்றிருந்தன.

99

66

மகிழா தீத்த இழையணி நெடுந்தேர்

99

66

66

பாடிப் பெற்ற பொன்னணி யானை வலம்படு தானை வேந்தர்

(புறம்.123:4)

(புறம்.177:3)

(புறம்.116)

பொலம்படைக் கலிமா எண்ணு வோரே

99

அரசருடைய போர் முரசும் அதுபோன்ற பிற சின்னங்களும் பொன்னால் அணிசெய்யப்பட்டிருந்தன.

66

பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம்

99

(புறம்.5)

கி.மு. 11ஆம் நூற்றாண்டிற்கும் 10ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் யூதேயா நாட்டையாண்ட சாலோமோன் அரசன் (1015– 975), ஒப்பீர் (Ophir) என்னும் இந்தியத் துறைமுகத்தினின்று வருவித்த பொருள்களுள் பொன்னும் ஒன்று. அத் துறைநகர், வேம்பாய் எனப்படும் பம்பாய் மாநகர்க்கு வடக்கே 37 கல் தொலைவிலிருந்த, உப்பரா அல்லது உப்பரகா என்று ஆராய்ச்சியாளராற் கருதப்படு கின்றது. கால்டுவெலார் அது ஒருகால் பாண்டி நாட்டின் கீழ்க்கரை யிலுள்ள உவரியா யிருக்கலாமென்று கருதினர். எதுவாயினும், ஒப்பீர் ஓர் இந்தியத் துறைநகர் என்பது உறுதி. சாலோமோன் காலத்திற் சேரநாடு குச்சரம் (குசராத்து) வரை பரவியிருந்தது.

று

தொன்றுதொட்டுப் பொன் இந்தியாவினின்று மேனாடுகட்கு ஏராளமாக ஏற்றுமதியாகி வந்ததனால், சேக்கசுப்பியர் (Shakespeare)