பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




37

தம் 'பன்னிரண்டாம் இரவு' (Twelfth Night) என்னும் நாடகத்தில், பொன்னை ‘இந்திய மாழை‘(metal of India) என்றார் (2:5).

(4) குமரிநாட்டில் பொன் கிடைத்தமைபற்றிய நெட்டிமையார்

கூற்று:

CC

தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

(புறம்.9)

இதன் பழைய வுரை: "தம்முடைய கோவாகிய சிவந்த நீர்மையை யுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் கடற்றெய்வத்திற் கெடுத்த விழாவினை யுடைய நெடியோனா லுளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி யென்னு மாற்றின் மணலினும் பலகாலம்”,

குமரிநாட்டு மாந்தர் முதற்காலத்தில் இயற்கை நீர்நிலை களையே சார்ந்திருந்ததனாலும், ஆறில்லாத விடமெல்லாம் அடர்ந் திருண்ட காடா யிருந்ததனாலும், மக்கள்தொகை மிகமிகப் பெரும்பாலும் ஆறுகளை யடுத்தே பரவியிருத்தல் வேண்டும். ஆதலால், பெருமலை நாடான குறிஞ்சியையும், குறுமலை நாடான முல்லையையுங் கடந்தபின், கரடும் கல்லும் முரம்பும் பாறையும் அருகி நீர்வளமும் நிலவளமும் மிக்க மருதநிலத்திற்கே இயற்கை யாகப் பரவியிருந் திருப்பர்.

அங்கு நெல்லும் வாழையும் போன்ற நிலைத்திணை (தாவர) வகைகளையும், அவற்றிற் கேற்ற மென்னிலத்தையுங் கண்டு, அவற்றைச் செயற்கையாக விளைவிக்க முனைந்து உழைத்தனர். என்றும் நீர் வேண்டும் பயிர்களைக் கரிசல் நிலத்திலும், இடையிட்டு நீர் வேண்டும் பயிர்களைச் சிவல் நிலத்திலும் பயிரிட்டனர். செடி கொடி புற்களைதல், கல்லெடுத்தல், உரமிடுதல், பன்முறையுழுதல், கட்டியடித்தல், பரம்படித்தல் (பல்லியாடுதல்), புழுதி யாக்குதல், காயவிடுதல் என்னும் பல்வகையில் திருத்தப்பட்ட நிலம் செய் எனப்பட்டது. செய்தல் = திருத்துதல். பேரளவாகத் திருத்தப்பட்டது நன்செய் என்றும், சிற்றளவாகத் திருத்தப்பட்டது புன்செய் என்றும் சொல்லப்பட்டன. நன்செய் உரம் மிகுதியாக வைக்கப்படுவதால் வயல் என்றும் (வை-(வய்)-வயல்), சேறுபடுதலால் செறு என்றும், பள்ளமாயிருத்தலால் பண்ணை யென்றும், போரடிக்குங் களஞ் சேர்ந்திருப்பின் கழனி யென்றும், நீண்ட காலம் பண்படுத்தப்பட்டுப் பழமையானபின் பழனம் என்றும் பெயர் பெற்றது. நெல்வயலில்