பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




39

ஊனுக்கு, வயலிலும் வாய்க்காலிலும் பிடித்த மீனையும் ஆமையையும், வீட்டில் வளர்த்த ஆடு கோழிகளையும் பயன் படுத்தினர். இடையிடை முல்லைக்குங் குறிஞ்சிக்குஞ் சென்று, தமக்கு வேண்டிய விலங்கு பறவைகளை வேட்டையாடியும் வந்தனர்.

காரத்திற்கு மிளகையும், இளங்காரத்திற்கும் சுவைக்கும் வெங்காயத்தையும், நிறத்திற்கும் மணத்திற்கும் சளிமுறிப்பிற்கும் மஞ்சளையும், சப்பென்றிருத்தலை நீக்கிச் சுவையூட்டற்கு உமண் என்னும் உவர்நிலத்து உப்பையும் சமையலிற் சேர்த்துக்கொண்டனர்.

குறிஞ்சியிலும் முல்லையிலும் பெரும்பாலும் பாலும் சூட் டிறைச்சியுமே உண்டதனால், அவ் வுணவிற்கு உவர்ப்புப்பொருள் தேவை யில்லாதிருந்தது. முல்லை நிலத்தில், தினை வரகு சாமை முதலியவற்றின் அரிசியைப் பாலிலுஞ் சமைத்திருக்கலாம். மருத நிலத்திற்கு வந்த பின்பே சிறந்த முறையிற் சமையல் தொடங்கியதால், பொங்கல் புழுங்கல் அவியல் சுண்டல் துவட்டல் புரட்டல் காய்ச்சல் பொரியல் முதலிய வினைகளை நீரிற் செய்தற்கு, உவர்ப்புச் சரக்குச் சேர்க்கவேண்டியதாயிற்று. உப்பு விளைக்கும் உவர்நீர்க் கடலைச் சார்ந்த நெய்தல் நிலத்தை அடுக்குமுன், உமணையே பயன்படுத்தி யிருத்தல் வேண்டும். உமண் என்பது உவர்மண். அதை முதலில் விற்றவர், பின்பு நெய்தல் நிலத்து உப்பளத்தில் உப்பு விளைத்த போதும், உமணர் எனப்பட்டனர்.

66

களர்நிலத் துப்பிறந்த வுப்பினைச் சான்றோர்

99

·

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்' (நாலடி.133)

பொரியல் முதலில் ஆவின் நெய்யிலேயே செய்யப்பட்டது. அதனாலேயே, பின்னர் எள்ளிலிருந் தெடுக்கப்பட்ட நெய்ப் பொருள் எண்ணெய் (எள்நெய்) எனப் பெயர் பெற்றது. எள்ளின் நெய்யே முதற் காலத்தில் பெருவழக்கமாக வழங்கினதனால், பிற்காலத்தில், ஆவின் நெய் தவிர மற்றெல்லா நெய்வகைகட்கும் எண்ணெய் என்பது பொதுப்பெய ராயிற்று.

சமையற்கு வேண்டிய நெருப்பு, நாள்தொறும் ஞெலிகோலால் விரைந்து கடையப்பட்டது. அது வீடுதொறும் இறவாணத்திற் செருகப்பட்டிருந்தது. குறிஞ்சி வாணரும் முல்லை வாணரும் வேட்டைக்காரரும், அதை என்றுங் கையில் வைத்திருந்தனர்.

66

Co

இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போல

கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து

“ புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியுங் கல்லா விடையன் போல

66

99

99

99

செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன் தொழுதன னெழுவேற் கைகவித் திரீஇ

(புறம்.315:4)

(புறம். 247:2)

(புறம்.331:4)