பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை கானதர் மயங்கிய இளையர் வல்லே தாம்வந் தெய்தா வளவை யொய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின்

இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின்” (புறம்.150:7-13) வை பிற்காலத்துச் செய்யுளாயினும், முற்காலத்து நிலைமை யையுங் குறிக்கும்.

தீப்பட்ட விடத்தில் களிமண் இறுகிக் கற்போற் கெட்டியான தைக் கண்டு, களிமண்ணாற் பானை சட்டிகளை வனைந்து சுட்டுச் சமையற் கலங்களாகப் பயன்படுத்தினர்.

பருத்திப் பஞ்சால் நூலிழைத்துப் பல்வகை ஆடைகளை நெய்துகொண்டனர். நூல் நூற்றல் பெண்டிராற் செய்யப்பட்டு வந்தது என்பதை, “நுண்ணிய பலவாய பஞ்சுநுனிகளாற் கைவன் மகடூஉ தனது செய்கை மாண்பினால் ஓரிழைப் படுத்தலாம், உலகத்து நூனூற்ற லென்பது" என்னும் இறையனா ரகப்பொருளுரைக்

கூற்றாலும் (நூற்பா.1),

பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா

கையேவா யாகக் கதிரே மதியாக

99

மையிலா நூன்முடியு மாறு

எஞ்சாத

(நன். 23)

என்னும் நன்னூற் பொதுப்பாயிர நூற்பாவாலும் அறியலாம். வீட்டிலிருந்து செய்யும் தொழிலுக்கு ஏற்றவர் பெண்டிரே. பருத்தி நூல் நூற்ற பெண்டிர் பருத்திப் பெண்டிர் எனப்பட்டனர்.

"பருத்திப் பெண்டின் பனுவ லன்ன”

(புறம்.125)

கணவனொடு கூடிய பெண் வீட்டுவேலையுஞ் செய்யலாம்; நன்செய் புன்செய்க் காட்டுவேலையுஞ் செய்யலாம். கணவனை யிழந்த கைம்பெண், தன் கற்பைக் காத்துக்கொண்டு பிழைக்க வீட்டுவேலையே செய்தல் கூடும். அத்தகைய வேலை அக்காலத்து நூல் நூற்றலே. ஆதலாற் கைம்பெண்டிர் அதனை மேற்கொண்டனர். ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்குநுண் பனுவல் போல

99

ஆடைநெசவு இருபாலாராலுஞ் செய்யப்பட்டு வந்தது.

ஆை

(நற்.353)

அழகிற்கும் மணத்திற்கும், பல்வகை நறுமலர்களைக் கண்ணி யாகக் கட்டியும் மாலையாகத் தொடுத்தும், ஆடவர் கழுத்திலும் பெண்டிர் கொண்டையிலும் நாள்தொறும் புதிது புதிதாக அணிந்து கொண்டனர்.