பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




41

மருதநில மண் கெட்டியா யிருந்ததனால், உயர்ந்த மண்சுவர் எழுப்பிப் பெருவீடு கட்டிக் கூரை வேய்ந்துகொண்டனர். ஊர்த் தலைவராயிருந்தவர், முல்லை நிலத்துக் கரடுகளிலுங் குன்றுகளிலு மிருந்து கற்கொணர்வித்து, காரை (மணல் கலந்த சுண்ணாம்புச் சாந்து) பூசிக் கல்வீடு கட்டிக்கொண்டனர். சுடுமட்கலந் தோன்றியபின் சுடுமட் கல்லுஞ் சுடுமண் ஓடுந் தோன்றியதனால், அதிகாரமுஞ் செல்வமுஞ் சிறந்தவர் காரைபூசிச் செங்கல் மனைகள் கட்டி ஓடு வேய்ந்துகொண்டனர். ஓடு வேயாது மட்டமாக முகட் மைத்த காரைவீடு மச்சுவீடெனப்பட்டது. சுடுமண் என்பது, முதலில் சுட்ட கலம், சுட்ட செங்கல், சுட்ட ஓடு ஆகிய மூன்றையுங் குறித்தது. சுடுமண் = 1. மட்கலம் (சிலப்.14: 146 அரும்.). 2. செங்கல் .“சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில்" (பெரும்பாண்.405). 3. ஓடு. ‘சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்” (சிலப். 14:146).

66

சுட்ட செங்கல் சுடுமட் பலகை யென்றுஞ் சொல்லப்பட்டது. பயிலுஞ் சுடுமட் பலகைபல கொணர்வித்து

66

99

(பெரியபு.ஏயர்கோன். 49)

இறுதியில் செங்கல் என்னும் பெயரே நிலைத்தது. பார்வைக்கு நன்றாயிருக்கவும் வண்ண ஓவியம் வரையவும், செங்கற் சுவரெல்லாம் மணல் கலவாத வெண்சாந்தினால் தீற்றப்பட்டன.

வெண்சாந்து பூசிய காரைவீடு, கூரை வேய்ந்த மண் வீட்டொடு ஒப்புநோக்கிய போது விளங்கித் தோன்றியதனால், நகர் என்று பெயர் பெற்றது. நகுதல் = விளங்குதல். நகு-நகர். நகர்மிக்க வூரும் சினையாகு பெயராக நகர் எனப்பட்டது. வீட்டைக் குறிக்கும் குடி என்னுஞ் சொல்லும், குடிமிக்க வூரைக் குறித்தல் காண்க. (எ-டு: மன்னார்குடி, காரைக்குடி). இம் மயக்கந் தவிர்த்து ஊரையே குறிக்க நகரி என்னுஞ் சொல் எழுந்தது. நகர்களை (காரை வீடுகளை) உடை யது நகரி. பெரிய நகர் (ஊர்) நகரம் எனப்பட்டது. இக்காலத் தில் மாநகர் என்பர். அங்ஙனஞ் சொல்லத் தேவையில்லை. ‘அம்’ என்பது பெருமைப் பொருள் குறிக்கும் பின்னொட்டு. எ-டு: நிலை- நிலையம், விளக்கு-விளக்கம், மதி-மதியம் முழுநிலா.

நகர்களிலேயே நாகரிகந் தோன்றியதனால், நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்னுஞ் சொல்லினின்றே திரிந்தமைந்தது. நகர்- நகரகம்-நகரிகம்-நாகரிகம். இதன் விளக்கத்தை என் ‘பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்' என்னும் நூலிற் காண்க.

அரசன் அல்லது அவனுடைய துணையதிகாரிகள் வதிதல், அறிஞரும் புலவரும் பேராசிரியரும் வாழ்தல், கணக்காயர் பள்ளி