பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

களும் தனிப்பட்ட பெரும்புலவரின் உயர்நிலைக் கல்வி நிலையங்களும் அமைந்திருத்தல், பெரும்பாலார் எழுதப் படிக்கத் தெரிந்தவரா யிருந்து திருத்தமாகப் பேசுதல், எல்லாருந் திருந்திய பழக்கவழக் கங்களை மேற்கொள்ளுதல், அழகிய ஆடையணிகள் உடல் மறைய அணியப் படுதல், துப்புரவான காரைவீடுகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் நேரான பெருந்தெருக்களும் புதைசாலகங்களும் இருத்தல், ஏந்தான அழகிய வூர்திகள் இயங்குதல், உயர்ந்த அறுசுவை யுண்டிகள் உண்ணப்படுதல், பலவகை யுயர்ந்த பிறநாட்டு ஐம்புல நுகர்ச்சி யரும்பொருட் கடைகள் அடுத்தடுத்திருத்தல், களவுங் காள்ளையும் நிகழாவாறு ஊர்காவலர் அல்லும் பகலுங் காத்தல், கொலையாளிகளையும் பிற குற்றவாளிகளையுந் தண்டிக்கும் அறமன்றமும், திருக்கோயில்களும் துறவியர் மடமும் சொற்பொழி வுக் கூடமும் பட்டிமண்டபமும் உண்மை முதலிய ஏதுக்களால், நகரங்களும் நகர்களுமே நாகரிகப் பிறப்பிடமாயின. அநாகரிகனை நாட்டுப் புறத்தானென்றும், பட்டிக்காட்டானென்றும் சொல்வதே, தை வலியுறுத்தும். நகர மேம்பாடுகள் நகர்களிற் குன்றியிருக்கு மேனும் நாகரிகத்திற் கேதுவானவையே. நாகரிகம் நகரிற் பிறந்ததெனின், நகரத்திற் சிறந்த தெனலாம். பாண்டியன் மதுரை ஒரு நகரம் (மாநகர்). அக்காலத்து நெல்லை (திருநெல்வேலி) ஒரு நகர். வைகை மதுரை போன்றதே பஃறுளியாற்றுத் தென்மதுரை.

நாகரிகத்தின் மூளை குறிஞ்சிநிலத்திலேயே தோன்றியதேனும், அது முழுவளர்ச்சி யடைந்தது மருதநிலத்து நகர்ப்பாங்கே யென்றும், குறிஞ்சி நாகரிகமும் முல்லை நாகரிகமும் மருத நாகரிகத்தின் கீழ்நிலைகளே யென்றும், நெய்தல்நிலை வணிக வளர்ச்சிக்கும் செல்வப் பெருக்கத்திற்குமே ஏதுவென்றும், பாலைநிலை நாகரிக வளர்ச்சியின்றிப் பண்பாட்டிழிபையே காட்டுமென்றும் அறிதல் வேண்டும்.

மருதநிலக் குமுகாய வாழ்வில், ஒருமனை மணமும் இறப்பு வரை பிரியா இல்வாழ்வும் பெரும்பான்மையாயின. ஒருவனால் மணஞ் செய்யப்பட்டமைக்கு அறிகுறியாகப் பெண்ணின் கழுத்திற் பொற்றாலி கட்டப்பட்டது. பன்மனை மணமும் தீர்வை முறையும் தொடர்ந்தன வேனும், தொல்லை மிகுதியும் பண்பாட்டிழிபும்பற்றி அவை தாழ்வாகக் கருதப்பட்டன. ஊர்த் தலைவனும் அவனுக்கு மேற்பட்ட அரசரும், இன்பச் சிறப்பு நோக்கிப் பன்மனை மணத்தையே கடைப் பிடித்தாரேனும்,அதன் இழிவை அவரது தெய்வத்தன்மையான அதிகாரம் முற்றிலும் மறைத்துவிட்டது. மருதநிலத்து நிலையான குடியிருப்பும் பயிர்த்தொழிலிற் குடும்பக் கூட்டுழைப்பும், கணவன் மனைவியர் காதலை வளர்த்து மண வாழ்க்கையை நீடிக்கச் செய்தன. உயிருக் கின்றியமையாத உணவுப்